‘அஞ்சான்’ படத்துல சூர்யாவுக்காக வந்து குத்தாட்டம் போட்டிருக்காங்க சித்ராங்கடா சிங். பக்கா சிங்குவான்னு கேட்டீங்கன்னா அது இல்ல.. ராஜஸ்தான் ஜாட் வம்சம். மீரட்ல பொறந்தவங்க. இப்போ இவங்களை பாப்பான்னுகூட சொல்ல முடியாது. ஏன்னா அம்மணிக்கு இப்பவே வயசு 38.
இவங்களோட முதல் ஹிந்தி படமான 2003-ல் வெளிவந்த Hazaaron Khwaishein Aisi படத்துல இவுங்க நடிப்பை பார்த்திட்டு “அந்தக் கால ஸ்மிதா பாட்டீல் மாதிரி இருக்காங்க”ன்னு சேகர் கபூரே ஜொள்ளு விட்டிருக்காரு.. இப்படிச் சொல்லியே இவுக மனசைக் கலைச்சு கலைத்துறைக்குள்ள இழுத்து விட்டுட்டாங்க.. அம்மணிக்கு கதக் டான்ஸ் அத்துப்படி.. அனைத்து வகை நடனங்களும் தெரியும்..
வாட்டசாட்டமான உடம்பு.. தென் அமெரிக்க அழகியைப் போன்ற முகவெட்டு.. டெல்லில படிப்பை முடிச்சிட்டு நேரா விளம்பரத் துறைக்கு வந்துட்டாங்க.. ஐசிஐசிஐ வங்கி, ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ் என்று இவர் மின்னிய விளம்பரங்கள் நிறைய..
இடைல கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க.. ஜோதிசிங் ரண்டவா என்கிற புகழ் பெற்ற கோல்ப் விளையாட்டு வீரர்தான் இவரது கணவர். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். பாலிவுட்டில் சில படங்களில் நடித்து வெற்றி பெற்ற பிறகு வழக்கம்போல கணவரை விவாகரத்து செய்து தனியே செட்டிலாகிவிட்டார்.
2006-ல் இவர் நடித்த Kal – Yesterday and Tomorrow என்ற படத்திற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். இப்போது சினிமாவில் எந்த வேடமானாலும் நடிக்கத் தயார் என்று போர்டு எழுதி மாட்டாத குறையாக நடிப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அயிட்டம் சாங்கில் ஆடுவதற்கும் தயங்குவதில்லை.
Yeh Saali Zindagi, Desi Boyz, Inkaar, I, Me Aur Main என்று இவர் நடித்த படங்களின் லிஸ்ட்டும் இருக்கின்றன. அதோட விளம்பர உலகத்தையும் அம்மணி விட்டுடலை. ஏர்டெல், பாராசூட் எண்ணெய், பூமா போர்ஜஸ் எண்ணெய், கேமியர் அலிவா கிராக்கர்ஸ், தாஜ்மஹால் டீ, ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ், தனுஷ்க்ஸ் நியூ கலெக்ஷன் போன்ற நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசடர் இப்போதைக்கு இந்த அயிட்டம் கேர்ள்தான் என்பது பெருமையானது.
பிள்ளை பெற்ற பிறகு ஹீரோயினாத்தான் நடிக்க முடியாது.. ஆனா அயிட்டம் கேர்ளா வரலாம்ன்னு தமிழ் ரசிகர்கள் விதிவிலக்கு கொடுத்திருப்பதால் இப்போது தமிழில் முதல் முறையாக ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்காக ஒரு கெட்ட குத்தாட்டம் போட்டுள்ளார் இந்த அழகி.
மும்பையில் உள்ள பன்வல் என்னுமிடத்தில் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் போட்டு ஆடியிருக்கிறார். ‘சிரிப்பு என் ஸ்பெஷாலட்டி.. சில்க் ஸ்மிதா என் கம்யூனிட்டி’ என்கிற அபாரமான, தத்துவ ஞானமுள்ள தமிழ்ப் பாடலுக்குத்தான் இந்தக் குத்தாட்டமாம்..!
படத்துக்குப் படம் நல்ல கதையிருக்கோ இல்லையோ.. குத்தாட்டம் ஆட புது பாப்பா இருக்கான்னுதான் தமிழ் ரசிகர்கள் கேக்குறாங்களாம்..! அப்படீன்னு இவங்களுக்கு நினைப்பு..!!!