full screen background image

‘ரம்’ படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்

‘ரம்’ படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்

ஆல் இன் பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் திரைப்படம் ‘ரம்’. அறிமுக இயக்குநர் சாய் பரத் இயக்க இளைஞர்களின் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த ரிஷிகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ‘பத்மஸ்ரீ’ விவேக் நடிக்கிறார்.

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’ ‘கத்துக்குட்டி’ என வித்தியாசமான திரைப்படங்களில் நடித்துள்ள நரேன் அதேபோல் இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

Our Score