full screen background image

‘அந்தகன்’ படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றப்பட்டார்..!

‘அந்தகன்’ படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றப்பட்டார்..!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘அந்தகன்’ படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.

நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படம் ‘அந்தகன்’. இந்தப் படம் ஹிந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்.

இந்தப் படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். ஹிந்தியில் தபு நடித்த முக்கியமான கதாபாத்திரத்தில் தமிழில் சிம்ரன் நடிக்கவிருக்கிறார். மேலும் படத்தில் நடிக்கவிருக்கும் மற்றைய நடிகர், நடிகைளின் தேர்வு நடந்து முடிந்துவிட்டது.

இந்தப் படத்தினை முதலில் இயக்குநர் ஜெயம் ராஜா இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் துவக்க வேலைகள் முடிவடையதாதால் ஜெயம் ராஜா இந்தப் பிராஜெக்ட்டில் இருந்து விலகிக் கொண்டு தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் மலையாள ‘லூசிபர்’ படத்தின் ரீமேக்கை இயக்குவதற்காகச் சென்றுவிட்டார்.

இதையடுத்து ‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் இயக்குநரான ஜே.ஜே.பிரடெரிக் இந்தப் படத்தை இயக்க வந்தார்.

இப்போது இவரும் வெளியேற… படத்தின் தயாரிப்பாளரான தியாகராஜனே இந்தப் படத்தை இயக்குகிறாராம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 25-ம் தேதி சென்னையில் துவங்கவிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களினால் தள்ளிப் போடப்பட்டு இறுதியாக இன்றைக்குத்தான் துவங்கியிருக்கிறது.

சென்னையிலேயே ஒரு மாதம் நடக்கவிருக்கும் இத்திரைப்படம் அதன் பின்பு ஹைதராபாத், பாண்டிச்சேரி, வட இந்தியா என்று பல இடங்களிலும் பயணிக்கவுள்ளது.

Our Score