‘அண்டாவ காணோம்’ ஆகஸ்ட் 28-ம் தேதி டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது..!

‘அண்டாவ காணோம்’ ஆகஸ்ட் 28-ம் தேதி டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது..!

ப‌ல‌ வெற்றி ப‌ட‌ங்க‌ளை கொடுத்த‌ தயாரிப்பாள‌ரான J.S.K.சதீஷ்குமார், தனது புதிய தொழில் முயற்சிகளான Audio நிறுவனம் ம‌ற்றும் Jsk Prime YouTube Channel வெற்றியை தொட‌ர்ந்து அடுத்த‌ முய‌ற்சியாக‌ இம்மாத‌ம் ஆகஸ்ட்  28-ம் தேதி முத‌ல் ‘JSK PRIME MEDIA’ என்னும் டிஜிட்ட‌ல் த‌ள‌த்தை அறிமுகப்படுத்துகிறார்.

இதில் ம‌க்க‌ள் திரும்ப‌ திரும்ப‌ பார்க்க‌ நினைக்கும் சூப்ப‌ர் ஹிட் திரைப்ப‌ட‌ங்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ பார்க்க‌லாம். அதும‌ட்டுமில்லாது புத்த‌ம் புதிய‌ திரைப்ப‌டங்க‌ளும் வெளியாக‌வுள்ள‌ன‌. அப்ப‌டி வெளியாகும் திரைப்ப‌ட‌ங்க‌ளை பார்க்க மட்டும்  க‌ட்ட‌ண‌ம் செலுத்த‌ வேண்டும்.

அதில் முத‌லாவ‌தாக JSK FILM CORPORATION தயாரிப்பில் அறிமுக‌ இய‌க்குநர்  C.வேல் ம‌தியின் இய‌க்க‌த்தில் உருவான ‘அண்டாவ காணோம்’ திரைப்ப‌ட‌ம் வெளியாக‌ உள்ள‌து.

இத்திரைப்ப‌ட‌ம் முழுக்க‌, முழுக்க‌ கிராம‌த்தை மைய‌மாக‌க் கொண்டு ஒரே நாளில் ந‌ட‌க்கும் ந‌கைச்சுவை க‌லந்த‌ குடும்ப திரைப்ப‌டமாகும்.

இந்தப் ப‌ட‌த்தில் ஷ்ரேயா ரெட்டி க‌தாநாய‌கியாக‌ ந‌டித்துள்ளார். அவ‌ரின் ந‌டிப்பு எப்போதும்போல்‌ ர‌சிக‌ர்க‌ளை ஈர்க்கும் என்ப‌தில் சிறிதும் ச‌ந்தேக‌ம் இல்லை.

இந்தப் படத்தில் நடித்த 100-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்  க‌தையில் அண்டாவோடு சேர்ந்து நடித்தார்கள் என்பதைவிட வாழ்ந்தார்க‌ள் என்ப‌துதான் உண்மை.

ஒரு அண்டாவை மைய‌மாக ‌வைத்து காதல், பாசம், கோப‌ம், ந‌கைச்சுவை, பிரிவு, இழப்பு, ஜாதி, ம‌த‌ம், இப்படி  ப‌ல்வேறு உணர்வுகளை வெளிப்டுத்தும்வகையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.

அனைவ‌ரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘அண்டாவ காணோம்’ திரைப்ப‌ட‌ம் JSK PRIME MEDIA Digital த‌ள‌த்தில் வ‌ரும் ஆகஸ்ட் 28-ம் தேதி உல‌கமெங்கும் வெளியாக‌ உள்ள‌து.

இப்ப‌ட‌த்தை தொட‌ர்ந்து  'Mummy Save Me', 'Va Deal' போன்ற‌ புத்த‌ம் புதிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளும் இதே தளத்தில் வெளியாக‌வுள்ள‌ன‌.

நீங்க‌ள் விரும்பிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை சந்தாதார‌ர் க‌ட்ட‌ண‌மின்றி இல‌வ‌ச‌மாக‌ பார்க்க‌லாம். புதிதாக‌ வெளியாகும் திரைப்ப‌ட‌ங்க‌ளை ம‌ட்டும் அந்த‌ந்த‌ திரைப்ப‌ட‌ங்க‌ளின்  க‌ட்ட‌ணங்க‌ளில் நிப‌ந்த‌னைக‌ளுக்குட்ப‌ட்டு பார்த்து ம‌கிழலாம்.

Jsk Prime Media App உங்க‌ள் Smart TV, IOS, Android, Fire Stick, Web Browser எல்லாவ‌ற்றிலும் எளிமையான‌ முறையில் கிடைக்கும்.

வெறும் 100 செலவில் உங்க‌ளுக்கு பிடித்த‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை குடும்ப‌த்தோடு பார்த்து கொண்டாடத் தயாராகுங்கள்.