இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனந்தா’.
வலியை அமைதியாக மாற்றும் நம்பிக்கையை மையமாகக் கொண்ட ஐந்து ஆழமான, மனதை நெகிழ வைக்கும் கதைகளை இப்படம் வழங்குகிறது.
பா. விஜய் வசனம் மற்றும் பாடல்களை எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார்.
இப்படம் ஒவ்வொரு மனித வாழ்விலும் வழிகாட்டும் கண்ணுக்கு தெரியாத அருளை படம் பிடித்துக் காட்டுகிறது.
ஜெகபதி பாபு, சுஹாசினி மணிரத்னம், ஒய். ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ஸ்ரீ ரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடித்துள்ள ‘அனந்தா’ ஒரு வழக்கமான பக்தி படம் அல்ல..!
இது வாழ்க்கை, அன்பு மற்றும் இறைவனின் காண முடியாத கிருபையை கொண்டாடும் ஒரு திரைக்காவியம்.
யதார்த்தம், உணர்ச்சி மற்றும் தெய்வீக ஆற்றல் ஆகியவற்றை கலந்து, இப்படம் ஐந்து இதயப்பூர்வமான கதைகளின் வழியாக விரிகிறது.
மீண்டும் எழும் ஒரு நடன கலைஞர், இழப்பில் கருணையை கண்டறியும் ஒரு மனிதன், ஒரு அற்புதத்தை காணும் தாய், இயற்கையின் அமைதியில் நம்பிக்கையை கண்டறியும் ஒரு வெளிநாட்டவர் மற்றும் கண்ணுக்கு தெரியாத அருளால் காப்பாற்றப்படும் ஒரு தொழிலதிபர்.
இந்தக் கதைகள் ஒன்றோடொன்று பின்னி பிணையும்போது, தெய்வீகம் என்பது கோவில்களிலோ அல்லது அற்புதங்களிலோ மட்டும் அடங்கி விடுவதில்லை..
அது நம்பிக்கை, இரக்கம் மற்றும் சரணாகதியின் ஒவ்வொரு செயலிலும் அமைதியாக வாழ்கிறது என்பதை இந்த ‘அனந்தா’ படம் வெளிப்படுத்துகிறது.
இப்படத்தின் தமிழ் உலகளாவிய விநியோக உரிமையை AP International நிறுவனம் பெற்றுள்ளது.
சத்ய சாயி பாபாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, இப்படம் 2025 நவம்பர் 23 முதல் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.
நடிகர்கள் :
ஜெகபதி பாபு
சுஹாசினி மணிரத்னம்
Y Gee மகேந்திரன்
தலைவாசல் விஜய்
நிழல்கள் ரவி
ஸ்ரீ ரஞ்சனி
அபிராமி வெங்கடாசலம்
தொழில் நுட்பக் குழுவினர் :
எழுத்து & இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்பாளர்: கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி
வசனம் & பாடல்கள்: பா. விஜய்
இசை: தேவா
ஒளிப்பதிவு: சஞ்சய் BL
படத் தொகுப்பு: S. ரிச்சர்ட்
தயாரிப்பு வடிவமைப்பு: வாசுதேவன்
நடன அமைப்பு: கலா
ஆடை வடிவமைப்பு: தட்ஷா தயாள்
விளம்பர வடிவமைப்பு: டிசைன் பாயிண்ட்ஸ்
நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: கவின் கிருஷ்ண ராஜ், சிதம்பரம் மணிவண்ணன்
பத்திரிக்கை தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்.









