சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அனலி’.
இந்தப் படத்தில் சக்தி வாசுதேவன், சிந்தியா லூர்டே, குமாரவேல், இனியா, கபிர் துகான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர், சிவா (கிளி), மேத்யூ வர்கீஸ், வினோத் சாகர், ஷிமாலி (குழந்தை நட்சத்திரம்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் – சிந்தியா லூர்டே, தயாரிப்பு நிறுவனம் – சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தினேஷ் தீனா, நிர்வாக தயாரிப்பு – M.பாலமுருகன், சண்டைப்பயிற்சி – ‘கலை மாமணி’ சூப்பர் சுப்பராயன், ஒளிப்பதிவு – ராமலிங்கம், இசை – DC (தீபன் சக்கரவர்த்தி), கலை இயக்குனர் – தாமு MFA, படத் தொகுப்பாளர் – ஜெகன் சக்கரவர்த்தி, நடன இயக்குநர் – விக்னேஷ், பாடலாசிரியர்கள் – கபிலன், அ.பா.ராஜா, யாசின் ஷெரிஃப், பாடகர்கள் – சைந்தவி, தீபன், யாசின், ரிஃப், விக்ரம், சிபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தல, தளபதி இருவரையும் வைத்து மிரட்டல் படங்களைக் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் ‘டாடா’, ‘கராத்தே பாபு’ ஆகிய படங்களின் இயக்குநர் கணேஷ் கே.பாபு ஆகியோர் வெளியிட்டனர்.
இயக்குனர் தினேஷ் தீனா ‘அனலி’ படம் பற்றி பேசும்போது, “இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் நடக்கக் கூடியது. மூன்றாம் உலகப் போர், கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய் மற்றும் ரங்கராவ் ரெட்டி இவர்களிடம் மாட்டிக் கொள்ளும் ஜான்சி மற்றும் அவளது பத்து வயது குழந்தை.. இவர்களைப் பற்றி பேசுகிறது.
காட்டு மிருகங்களைவிட மிகவும் மோசமானவன் மனிதன். அதில் மிகவும் முக்கியமானவன் இந்த லால் சேட்டா. ஜான்சி தன் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி எப்படி இதை முடிவுக்கு கொண்டு வருகிறாள் என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படம்தான் இந்த அனலி” என்றார்.
இந்தப் படத்தில் சைந்தவியின் அழகிய குரலில் ‘ஓர் மழைத் துளியும்’ என்ற பாடல் மற்றும் அ.பா. ராஜாவின் வரிகளில் வில்லன் பாடல் ‘குஜிலி கும்பா’ என்ற பாடலும் மிக அருமையாக வந்துள்ளது.
இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக பத்தாயிரம் கண்டெயினர்கள் கொண்ட யார்டில் மிக பிரமாண்டமான செட் அமைத்து படம் பிடிக்க முழு சுதந்திரம் அளித்து படத்தின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தியிருக்கிறார் தயாரிப்பாளர் சிந்தியா லூர்டே.
மிக விரைவில் பாடல்கள் மற்றும் திரைப்பட முன்னோட்டம் வெளியிடப்படும்.
இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக உள்ளது.
Produced by Cynthia Production House, “Anali” features Cynthia Lourde in the lead role. The film is written (story, screenplay, dialogues) and directed by debut filmmaker Dinesh Deena. The first look of the film was launched by renowned director Venkat Prabhu, known for delivering blockbuster films with stars like Thala and Thalapathy, and Ganesh K. Babu, director of Dada and Karate Babu.
Speaking about Anali, director Dinesh Deena said: “The entire story takes place over a single night. It revolves around Jhansi and her ten-year-old child, who get trapped between Third World War tensions and dangerous men like abduction king Lal Chetta, Khan Bhai, and Rangarao Reddy. Man can be far more dangerous than wild animals — and the most ruthless of them all is Lal Chetta. The film thrillingly portrays how Jhansi uses her intelligence to escape and bring everything to an end.”
The film’s songs and trailer will be released soon. The soundtrack features the melodious “Oru Mazhai Thuliyum” sung by Saindhavi, and the powerful villain track “Kujili Kumba” penned by A. Pa. Raja — both of which have turned out beautifully.
For the first time in Indian cinema, a massive set featuring ten thousand containers in a yard was constructed to shoot the film. Producer Cynthia Lourde provided complete creative freedom to ensure the film’s quality matches international standards.
The film is slated for release soon.
Cast
Shakthi Vasu Devan
Cynthia Lourde
Kumaravel
Ineya
Kabir Duhan Singh
Abishek Vinod
Jenson Diwakar
Siva (Kili)
Mathew Varghese
Vinoth Sagar
Ashok Pandiyan
Shimali (Child Artist)
and many others
Technical Crew
Producer – Cynthia Lourde
Production House – Cynthia Production House
Story, Screenplay, Dialogues, Direction – Dinesh Deena
Executive Producer – M.BalaMurugan
Stunt Master – (Kalaimamani) Super Subbarayan
Cinematography – Ramalingam
Music – DC (Deepan Chakravarthy)
Art Director – Thamu MFA
Editor – Jagan Chakravarthy
Choreographer – Vignesh
Lyricists – Kabilan, A.Pa.Raja, Yasin Sheriff
Singers – Saindhavi, Deepan, Yasin Sheriff, Vikram, Sibi









