full screen background image

புதியவர்களால் உருவாகியிருக்கும் ‘அம்சனா’ திரைப்படம்

புதியவர்களால் உருவாகியிருக்கும் ‘அம்சனா’ திரைப்படம்

யூடியூபில் 90 லட்சம் ஹிட் தந்த நம்பிக்கையில் அந்தக் குழுவினர் தயாரிப்பில் ‘அம்சனா’ படம் உருவாகியிருக்கிறது..!

ஒரு காலத்தில் சினிமாவை வந்தடைய ஒரு வழிப் பாதைதான் இருந்தது இப்போது பல வழிப் பாதைகள் உருவாகியிருக்கின்றன.

தொலைக்காட்சி  அறிமுகம், குறும்படங்கள், ஆல்பங்கள் போன்றவற்றின் மூலமும்  என்றெல்லாம் பல திசைகளிலிருந்தும் இப்போது எளிதில் சினிமாவில் நுழைய முடிகிறது.

அப்படி ஒரு புதிய திசையிலிருந்து வந்து ஒரு திறமைசாலிகளின் கூட்டம், முற்றிலும் புதுமுகங்களின் துணையோடு ‘அம்சனா’ என்கிற ஒரு படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

‘முத்து முத்து’ என்கிற மியூசிக் ஆல்பம் யூடியூபில் ஒன்பது மில்லியன், அதாவது  90 லட்சம் பார்வையாளர்களைத் தொட்டு கலக்கியது. அதில் டிஜே என்பவர்  பாடியதுடன் தோன்றி நடித்து அந்த ஆல்பத்தை  உருவாக்கியும் வெளியிட்டார். இவரது இயற்பெயர் டிஜெந்தன் அருணாச்சலம். இவர் சர்வதேச புகழ் பெற்ற பாடகர், பாடலாசிரியர், இசைத் தயாரிப்பாளர்.

உலக நாடுகளில் அதற்குக் கிடைத்த பரவலான பலத்த வரவேற்பு தமிழ்த் திரைத்துறையில் நுழையும் ஆர்வத்தையும், நம்பிக்கையையும்,  துணிவையும் டிஜேக்குத் தந்திருக்கிறது. களத்தில் இறங்கிவிட்டார்.  இப்படித்தான் ‘அம்சானா’  படக் குழு உருவானது.

இதில் டிஜேதான் நாயகன், நாயகி ஸ்ரீபிரியங்கா. ஒளிப்பதிவு – சிவானந்தம், இசை – டிஜே, இயக்கம் – நிஷாந்த், தயாரிப்பு – லிசா புரொடக்ஷன்ஸ் என  படக் குழு உருவானது.

திட்டம் போட்டு ஆயத்தமானார்கள். பாண்டிச்சேரிக்குப் படப்பிடிப்புக்கு  புறப்பட்டுப்போய், பாதிப் படத்தை முடித்து விட்டார்கள்.

இது ஒரு காதல் கதைதான் என்றாலும் திரைக்கதை,  அதைச் சொல்லும்விதம் எல்லாவற்றிலும் புதிய பாதை.. புதிய பயணம் என்றிருக்குமாம்.

இப்போதெல்லாம் படமெடுப்பதைவிட அதை வெளியிடுவது சிரமமாக இருக்கிறது. எனவே இப்போது வியாபாரம், வெளியீட்டு தளங்களிலும் மும்முரமாக இயங்கி வருகிறது இந்தப் படக் குழு.

Our Score