full screen background image

ஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்

ஆகஸ்ட்டில் வருகிறது ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ திரைப்படம்

லீ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லீ வருண் தயாரித்து, நடிக்கும் புதிய திரைப்படம் ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’.

இந்தப் படத்தில் கதாநாயகனாக வருண் நடிக்க, ஜெய்ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் ஸ்ரீநாத், ராகுல் தாத்தா, ‘லொள்ளு சபா’ மனோகர், ‘மொட்டை’ ராஜேந்திரன், பப்லு(அறிமுகம்) மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – விஜய மோகன், இசை – ஜெய் கிரிஷ், படத் தொகுப்பு – ரமேஷ் பாபு, நடன இயக்கம் – தினேஷ், சதீஷ், பாடல்கள் – மணி அமுதன், பா.விஜய், சண்டை பயிற்சி – ஃபயர் கார்த்திக், தயாரிப்பு  நிர்வாகம் – தி.பாக்கியசாமி, மக்கள் தொடர்பு – செல்வரகு.

வித்தியாசமான தலைப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் R.விக்னேஷ் இயக்குகிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு பசுபதி நடிப்பில் வெளியான ‘TN.07. 4777’  என்கிற படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

காமெடி கலந்த  காதல் கதையாக  ஒரே நாளில் ஒரு பூங்காவில் நடக்கிற காதல் கூத்துக்கள்  என  இப்படத்தில்  புதுமையான  முயற்சியை மேற்கொண்டுள்ளார்  இயக்குநர்  ஆர்.விக்னேஷ். 

படத்தில் மொத்தம் ஐந்து  பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில்  இரண்டு பாடல்களை  வித்தியாசமாக  படமாக்கியுள்ளதாக  இயக்குநர்  கூறியுள்ளார். மேலும், ஒரு பாடல் காட்சி பாங்காங்கில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு  பெங்களூர்  லால் பார்க், செம்மொழிப்  பூங்கா மற்றும்  சென்னை  அதன்  சுற்றுப்புறங்களில் நடைபெற்றுள்ளது. 

தற்போது, இந்தப் படத்தின் 50 சதவிகித  படப்பிடிப்பு  முடிவடைந்துள்ளது. வரும்  ஆகஸ்ட்  மாதம் இந்தப் படம்  திரைக்கு வர இருக்கிறது.

Our Score