தன்னுடைய வாழ்க்கையில் தமிழ்ச் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்ததுதான் தன்னுடைய பொற்காலம் என்று சொல்லியிருக்கிறார் நடிகை அமலா.
ஜீ தமிழ்த் தொலைக்காட்சியின் ‘உயிர்மெய்’ சீரியலின் ஷூட்டிங்கிற்காக இப்போது சென்னையில் தங்கியிருக்கும் அமலா, அனைத்து பத்திரிகைகளுக்கும் வஞ்சகமில்லாமல் பேட்டியளித்து கொண்டிருக்கிறார்.
இது ‘குமுத’த்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியிலிருந்து ஒரு பகுதி :
“வேலைக்காரனு’க்காக காஷ்மீர் போயிருந்தது இப்பவும் மனசுல இருக்கு. ரஜினியுடன் நான் நடி்சச முதல் படம் அது. என்னோட பெர்சனல் லைஃப் பத்தி ஆர்வமா கேட்டவர் தான் கடந்து வந்ததைப் பத்தியும் நிறைய எங்கிட்ட பேசினார்.
எதேச்சையா அமைஞ்சதா தெரியலை.. அதுக்குப் பிறகு ‘கொடி பறக்குது’, ‘மாப்பிள்ளை’ன்னு வரிசையா அவரோட நடிக்கிற வாய்ப்பு அமைஞ்சது.
இன்னொரு முறை மைசூர்ல ‘வேதம் புதிது’ ஷூட்டிங்ல இருந்தேன். எங்க ஷூட் நடந்த இடத்துல இருந்து கொஞ்ச தூரத்துல ‘ஊர்க்காவலன்’ ஷூட்டிங். அதுக்கு வந்த ரஜினி அப்படியே எங்க இடத்துக்கும் வந்தார்.
அப்ப சத்யராஜ், ரஜினி ரெண்டு பேரும் என்னோட அனிமல் லவ் பத்தி ஜாலியாவும், சீரியஸாவும் கமெண்ட் பண்ணாங்க.. ‘என்னை மாதிரியே உங்களையும் மாத்துறேன் பாருங்க’ன்னு ரஜினியோட செல்லமா சண்டை போட்டது, இப்பவும் ஞாபகத்துல இருக்கு..
என்னைப் பொறுத்தவரைக்கும் நான் தமிழ்ல நடிச்சிருக்கிட்டிருந்த காலம் பொற்காலம்..” என்று சொல்லியிருக்கிறார் அமலா.
அதென்ன எல்லா பேக் டூ பார்ம் ஹீரோயின்ஸெல்லாம் ரஜினிகூட நடிச்சதை மட்டுமே பேசுறாங்க..? மத்த ஹீரோக்களெல்லாம் பாவமில்லையா..?