ஜெயாஸ் பிலிம்ஸ் மற்றும் தரம் புரொடக்சன் தயாரிப்பில் ‘அமாவாசை’ என்னும் புதிய திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.
இப்படத்தில் கதாநாயகர்களாக ஜெய் ஆகாஷ், நுபுர் மேத்தா, ராஜேஷ் விவேக், ஜீவா, ஷ்ராவன், ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சாக்க்ஷி, ஷோகன், ப்ரீத்தி சிங், தன்யா மௌரியா, முமைத்கான், ரூபி கான், சீமா சிங் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் கோட்டா ஸ்ரீனிவாசராவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
மக்கள் தொடர்பு – செல்வ ரகு, ஒளிப்பதிவு – டேவிட் பாசு, இசை – சையத் அஹமத், படத் தொகுப்பு – அனில் பந்து, வசனம் – பாபா, தயாரிப்பாளர்கள் – ராகேஷ் சவந்த், சித்தார்த் சிக்மார், பூபேந்தர்சிங் டோமர், எழுத்து – இயக்கம் – ராகேஷ் சவந்த்,
இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான், உதய்பூர், ஜோத்பூர், சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் இசையப்பாளரான சையத் அஹமத் இசையில் படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவான இத்திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் 2017 மார்ச் மாதம் வெளியாகவுள்ளது.