அடுத்தடுத்து படங்களை செய்து நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிரு்ககிறார் தல அஜீத்..
வீரத்திற்கு பின்பு தன்னுடைய 55-வது படமாக கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் கதைப்படி அஜீத் போலீஸ் ஆபீஸராம்.. இதற்காக தனது இயல்பான நரைமுடியை டை அடித்து.. உடலுக்கும் டைட் அடித்து.. காக்கியை கஞ்சியில் போட்டு முக்கியெடுத்து தயார் செய்து வைத்திருக்கிறாராம்..!
தன்னுடைய உடலையும் எடை குறைத்து அழகாக காட்டுவதற்காக ஜிம்மிற்கு சென்று 7 கிலோ எடையை குறைத்துள்ளாராம். எது எப்படியிருந்தாலும் பரத்தே சிக்ஸ் பேக்கை காட்டிய பின்பு தல மட்டும் காட்டாமல் இருக்க முடியுமா..? இதில் அது மாதிரியான கட்டுடலை காட்டும் காட்சிகளும் இருக்கிறதாம்.. ஆனால் சிக்ஸ் பேக்கா.. எய்ட் பேக்கா என்பது மட்டும் தெரியவில்லை..
உடனே காலில் ஆபரேஷன் செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் வற்புறுத்தினாலும், கெளதம் மேனனுக்காகவும், ஏ.எம்.ரத்னத்திற்காகவும் இந்தப் படத்தை முடித்துக் கொடு்த்துவிட்டு வந்து ஆபரேஷன் டேபிளில் படுப்பதாக மருத்துவர்களிடம் உறுதியளித்திருக்கிறாராம்.
மார்ச் 15 அன்று துவங்கும் இந்தப் படம் அநேகமாக எல்லாம் சரியாக நடந்து முடிந்தால், வரும் தீபாவளி ஸ்பெஷலாக வெளிவரலாம் என்று தெரிகிறது..