full screen background image

குட்டி ராதிகா நாயகியாக நடிக்கும் ‘அஜாக்ரதா’ திரைப்படம்

குட்டி ராதிகா நாயகியாக நடிக்கும் ‘அஜாக்ரதா’ திரைப்படம்

பிரபல கன்னட நடிகையும், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான ‘குட்டி ராதிகா’ என அழைக்கப்படும் ராதிகா குமாரசாமி, கன்னட சினிமாவில் சூப்பர் ஹிட் பட தயாரிப்பு நிறுவனம் என பெயரெடுத்த ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி புரொடக்சன் தயாரிக்கும் ‘அஜாக்ரதா’ என்கிற புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஆக்சன் த்ரில்லராக உருவாக உள்ள இந்தப் படத்தில் ஸ்ரேயாஸ் தல்பேட் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சுனில், ராவ் ரமேஷ், ஆதித்யா மேனன், தேவராஜ், வினய் பிரசாத், ஷ்ரவன் மற்றும் பல தென்னிந்திய நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடிக்க உள்ளார். விரைவில் அவரது பெயர் அறிவிக்கப்படுமாம்.

‘தி ஷேடோஸ் பிஹைன்ட் தி கர்மா’ என்பதுதான் இந்தப் படத்தின் டேக்லைன்.

ரவிராஜ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, மிக பிரம்மாண்டமாக உருவாக்க முடிவு செய்துள்ளார் படத்தின் இயக்குநரான சசிதர். அதற்கேற்றபடி மிகப் பெரிய அளவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராதிகா குமாரசாமியின் பிறந்த நாளில் அவரை வாழ்த்தும்விதமாக ராதிகாவின் கதாப்பாத்திர போஸ்டரை ஹிந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டரில் சிவப்பு நிற பட்டுப் புடவையில் மிகுந்த ஆபரணங்களுடன் அதிரடியாக காட்சியளிக்கிறார் ராதிகா. அவர் பின்னால் பல தீபங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. அவருடைய பிறந்த நாளுக்கு மட்டுமல்லாமல், தீபாவளிக்கும் சேர்த்து இது ஒரு பொருத்தமான போஸ்டர்தான்.

 

Our Score