full screen background image

கேனபலிசத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘ஐயைய்யோ’ திரைப்படம்

கேனபலிசத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘ஐயைய்யோ’ திரைப்படம்

டார்க் ஹால் விஷூவல் ட்ரீட் மற்றும் லியோ ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பாக தயாரிப்பாளர்களான திருமதி.க.ரத்தினம் மற்றும் அன்சல்னா ஆசாத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘அய்யய்யோ’ .

இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யராஜ், சிவசுப்ரமணிய தீபக், ரஷீத், பிலிப்போஸ், நந்தா கிஷோர், சாஜி, தொட்றா குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – சரண் பிரகாஷ், சாண்டி சாண்டெல்லோ, ராம் கோகுல்ராம், பாடல்கள் – நிகரன், படத்தொகுப்பு – ஜெரால்டு பெஸ்டெஸ், ஒளிப்பதிவு – ரி.குமார் ராஜன் மற்றும் ஜெ.நவீன் குமார். 

சிவகணேசன் மற்றும் ஹரிகுமார் ராஜன், ராஜேஸ்வரி பாக்யராஜ் ஆகியோர் இணைந்து இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளனர்.

இந்தப் படம் ‘டார்க் காமெடி திரில்லர்’ வகையை சார்ந்தது.

தமிழக கேரள எல்லை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழில் தொடப்படாத கதைக் களமாக இருக்கும் ‘கேனிபலிசம்’ பற்றி இத்திரைப்படம் பேசுகிறது. 

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் படமென்றால் அவர்கள் செய்யும் சேட்டைகளும் அந்தப் படத்தில் இருக்கும்தானே… அப்படிப்பட்ட சம்பவங்களை திரைக்கதையில் இந்தப் படம் கொண்டுள்ளது. 

மனநல காப்பகத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் செய்யும் திட்டம், வலிப்புக்கு சாவி கொடுக்கும் காமெடி, கம்பவுண்டரிடமிருந்து மனநலம் பாதித்தவர்கள் சாவியை திருடும் காமெடிகள் நம்மை முதல் பகுதியில் சிரிக்க வைக்கும். மனநல காப்பகத்தில் இருந்து, மனநலம் பாதித்தவர்களை தப்பிக்க வைக்க கூறப்படும் காரணம் பகீர் ரகம்.

இந்தப் படத்தின் இரண்டாம் பகுதிதான் ‘கேனிபலிச’த்தை சுற்றி பின்னப்பட்டுள்ளது. ‘கேனிபலிசம்’ என்றால் நர மாமிசம் உண்ணும் பழக்கமுடையவர்களைப் பற்றியதாகும். அந்த வகையில், சில கொலைகளும், இன்னும் பல குடலைப் புரட்டும் காட்சிகளும் இந்தப் படத்தின் இரண்டாம் பகுதியை ஆக்கிரமித்து இருக்கின்றன.

வரும் மார்ச் -1-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. 

Our Score