காமன்மேன் புரொடெக்சன்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரிக்கும் புதிய படம் ‘ஐங்கரன்’
கமர்ஷியலுக்குண்டான காதல், ஆக்ஷன் கலந்த த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். முதல் முறையாக ஜி.வி.க்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.
மற்றும் ‘ஆடுகளம்’ நரேன், காளி வெங்கட், ஹரிஷ் பெராடி, அருள்தாஸ், சுவாமிநாதன், ரிந்து ரவி, ஐரின், பவுன்ராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஔிப்பதிவு – சரவணன் அபிமன்யு, இசை- ஜி.வி.பிரகாஷ்குமார், படத் தொகுப்பு -A.M.ராஜா முகமது, கலை – G.துரைராஜ், பாடல்கள்- ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக், நடனம் – ராஜு சுந்தரம், ஷோபி, சண்டை பயிற்சி – ராஜசேகர், இணை தயாரிப்பு. சுபா கணேஷ், தயாரிப்பு. பி.கணேஷ், எழுத்து, இயக்கம் – ரவிஅரசு.
‘ஐங்கரன்’ படப்பிடிப்பு நேற்று காலை சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் பங்கு கொள்ளும் அனைத்துக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.