full screen background image

“சண்டை கலைஞர்களுக்கும் தேசிய விருது” – ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை..!

“சண்டை கலைஞர்களுக்கும் தேசிய விருது” – ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை..!

“சினிமாவில் பணியாற்றி வரும் சண்டை கலைஞர்களை ஊக்குவிக்கும்வகையில் அவர்களுக்கு தேசிய விருது வழங்க வேண்டும்…” என்று இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது மத்திய அரசு வருடாவருடம் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுகளில் அந்தந்த வருடத்திய திரைப்படங்களில் சிறப்பான பங்களிப்பினை செய்த திரைப்பட கலைஞர்களுக்கு விருதும், பணமுடிப்பும் வழங்கி கெளரவித்து வருகிறது.

ஆனால் இந்தத் திரைப்பட பிரிவுகளில் சண்டை கலைஞர்களுக்கு இதுவரையிலும் விருதுகள் வழங்கப்படவில்லை. இது இந்திய அளவில் திரைப்படங்களில் பணியாற்றும் சண்டை கலைஞர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்து வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குநருமான ஐஸ்வர்யா தனுஷ் தற்போது ‘சினிமா வீரன்’ என்கிற தலைப்பில் சினிமாவின் நிஜ ஹீரோக்களான சண்டை கலைஞர்களை பற்றி பேசும் ஆவண படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரஜினிகாந்த் பின்னணி குரல் கொடுக்கவிருக்கிறார்.

aishwarya-dhanush-venkaiah-naidu-2

இந்த நிலையில், சினிமா சண்டை கலைஞர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ், நேற்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினார்.

அப்போது சினிமாவில் தற்போது மத்திய அரசு வழங்கி வரும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான தேசிய விருதுகளின் பிரிவில் நிஜ ஹீரோக்களான சினிமா சண்டை கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கி அவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன் வைத்தார். அமைச்சர் வெங்கையா நாயுடு இக்கோரிக்கையை பரிசீலிப்பதாக ஐஸ்வர்யா தனுஷிடம் உறுதியளித்துள்ளார்.

இந்தச் செய்தியறிந்து நமது கோடம்பாக்கத்து சண்டை பயிற்சியாளர்கள் மற்றும் சண்டை கலைஞர்கள் அனைவரும் ஐஸ்வர்யா தனுஷை பாராட்டியுள்ளனர்.

Our Score