full screen background image

சமுத்திரக்கனி-எம்.அன்பழகன் கூட்டணியில் ‘அடுத்த சாட்டை’ திரைப்படம்

சமுத்திரக்கனி-எம்.அன்பழகன் கூட்டணியில் ‘அடுத்த சாட்டை’ திரைப்படம்

2012-ம் ஆண்டு சமுத்திரக்கனி, யுவன், தம்பி ராமையா நடிப்பில் உருவான திரைப்படம் ‘சாட்டை’. எம்.அன்பழகன் என்னும் புது இயக்குநர் இயக்கிய இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.

இப்போது இந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘அடுத்த சாட்டை’ என்கிற பெயரில் புதிய படத்தை உருவாக்குகிறார்கள்.

இந்தப் படத்தை தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தனது ‘நாடோடிகள் புரொடெக்சன்ஸ்’ நிறுவனத்தின் சார்பிலும் டாக்டர் பிரபு திலக் தனது ‘11:11 புரொடெக்சன்ஸ்’ நிறுவனத்தின் சார்பிலும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, யுவன், தம்பி ராமையா, அதுல்யா, ராஜ் பொன்னப்பா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தயாரிப்பு – டாக்டர் பிரபு திலக், பி.சமுத்திரக்கனி, இயக்குநர் எம்.அன்பழகன், ஒளிப்பதிவு – ராசாமதி, இசை – ஜஸ்டின் பிரபாகர், கலை இயக்கம் – விஜயகுமார், படத் தொகுப்பு – நிர்மல், சண்டை இயக்கம் – சில்வா, ஸ்டில்ஸ் – மணி, தயாரிப்பு நிர்வாகம் – ஏ.எஸ்.சிவச்சந்திரன், மக்கள் தொடர்பு – நிகில்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் எம்.அன்பழகன், தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக், நடிகர்கள் யுவன், மணிகண்டன், நாயகிகள் அதுல்யா, ராஜ் பொன்னப்பா மற்றும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் உள்ளிட்ட தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Our Score