full screen background image

படத்துக்காக 10 நாளில் எடையைக் குறைத்த நடிகை இஷாரா நாயர்..!

படத்துக்காக 10 நாளில் எடையைக் குறைத்த நடிகை இஷாரா நாயர்..!

‘சதுரங்க வேட்டை’ படத்தில் நட்டி நட்ராஜுக்கு ஜோடியாக நடித்தவர் இஷாரா நாயர். இவர் நடித்த ‘பானு’ என்கின்ற வெகுளி கதாபாத்திரம் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்த இஷாரா நாயர் தற்போது ‘அதிமேதாவிகள்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி,  ‘அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்து இருக்கும் இந்த ‘அதிமேதாவிகள்’ திரைப்படத்தில், பிரபல தொகுப்பாளர் சுரேஷ் ரவி (‘மோ’ படப் புகழ்)  கதாநாயகனாக நடித்திருக்கிறார். 

CS 16_06

படத்தில் தனது கேரக்டர் பற்றியும், நடிப்பு அனுபவம் பற்றியும் பேசிய இஷாரா நாயர், “நான் முன்பு நடித்த கதாபாத்திரத்தின் சாயல் இதில் இருக்கக் கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்து தேர்வு செய்த திரைப்படம்தான் இந்த ‘அதிமேதாவிகள்’ திரைப்படம்.

இந்தப் படத்தில் சுஜி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றேன். இரண்டு கல்லூரி நண்பர்கள் வைத்திருக்கும் அரியர்ஸ் பற்றியும், அந்த அரியர்ஸை கடந்து வர அவர்கள் எடுக்கும் முயற்சிகளும்தான் ‘அதிமேதாவிகள்’ படத்தின் ஒரு வரி கதை.

CS 101_08 

இந்த படத்திற்காக எனது உடல் எடையை குறைக்க சொன்னார் இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன். அதற்கு அவர் கொடுத்த கால அவகாசம் வெறும் 10 நாட்கள்தான். இருந்தாலும் இதை நான் சவாலாக எடுத்து கொண்டு, 10 நாட்களில் என் உடல் எடையை குறைத்தேன்.

CS 95_06

மற்ற எல்லா படங்களில் இருந்தும் எங்களின் ‘அதிமேதாவிகள்’ படம் தனித்து விளங்கும். காதல்  இல்லாமல் வெறும் நட்பை மட்டுமே எங்கள் ‘அதிமேதாவிகள்’ படம் உள்ளடக்கி இருப்பதே அதற்கு காரணம். படத்தின் வெளியீட்டிற்காக ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றேன்…” என்று உற்சாகமாக கூறினார் கதாநாயகி இஷாரா நாயர்.

Our Score