ஸ்ரீகிரின் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாகவும், சுரபி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ‘அடங்காதே’. நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இயக்கம் – சண்முகம் முத்துசாமி, தயாரிப்பு – M.S.சரவணன், இசை – ஜி.வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு – PK வர்மா, படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன், சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன், நடனம் – பாபா பாஸ்கர், ஷெரிப், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு நிர்வாகம் – M.செந்தில், நிர்வாக தயாரிப்பு – M.சுரேஷ் ராஜா, அருண் புருஷோத்தமன், T.ரகுநாதன்.
புத்தாண்டு அன்று இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை பிரபல ஹிந்தி பட இயக்குநர் அனுராக் காஷ்யப் வெளியிட்டார். ‘அடங்காதே’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தற்போது ‘அடங்காதே’ படத்தின் டீசர் ஜனவரி 12 முதல் விஜய்யின் ‘பைரவா’ திரையிடப்படும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இது ‘அடங்காதே’ படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.