பிரபல இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகளும், நடிகையுமான விஜயலட்சுமி பெரோஸ் என்கிற உதவி இயக்குநரை காதலித்து வருகிறார். இவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது காதலருக்கு இதுவரையில் பட வாய்ப்பு கிடைக்காததால் தானே ஒரு படத்தினைத் தயாரிக்க முன் வந்து காதலுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் விஜயலட்சுமி.
விஜயலட்சுமி தனது சொந்த பட நிறுவனமான ‘Tea Time Talks’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் பெயர் ‘பண்டிகை’.
இந்தப் படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். இவர்களோடு கருணாஸ், ‘பருத்தி வீரன்’ சரவணன், நித்தின் சத்யா, சபரிஷ், ‘கோலிசோடா’ மதுசூதனன், ‘பிளாக்’ பாண்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – அரவிந்த், இசையமைப்பாளர் – RH விக்ரம், படத்தொகுப்பு – சாபு ஜோசப்ஃ, கலை இயக்கம் – ரெமியன், ஸ்டன்ட் மாஸ்டர் – அன்பறிவு, நடன அமைப்பாளர் – பிருந்தா சதீஷ், காஸ்டியும் டிசைன்ஸ் – நிரஞ்சனி அகத்தியன், தயாரிப்பாளர் – விஜயலட்சுமி அகத்தியன், தயாரிப்பு நிறுவனம் – Tea Time Talks, இயக்குநர் – ஃபெரோஸ்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் பெரோஸ், “முரட்டு சுபாவத்துடனும் கோபத்துடனும் வளரும் அன்தையான வேலு ஒரு கட்டத்தில் எல்லோரையும் போல் ஒரு அமைதியான வாழ்க்கை வேண்டி தன்னை மாற்றி சராசரி மனிதனாகிறான். சண்டை வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் வேலு சந்தர்ப்ப சூழ்நிலையால் நிழல் உலகில் illegal-ஆக நடத்தப்படும் பந்தயச் சண்டைக்கு அறிமுகமாகிறான்.
அடக்கி வைத்த கோபம் வெளிக்காட்டும் இடமாகவும், பணம் கொட்டும் கோட்டையாகவும் இந்த பந்தயச் சண்டை திகழ, அதில் விரும்பி விழுகிறான். வேலுவிற்கு இந்த சண்டை எதிர்ப்பார்க்காத ஒரு பெரிய பிரச்சனையையும் கொடுக்க. எப்படி அதில் இருந்து அவன் தப்பிக்கிறான் என்பது மீதிக் கதை…” என்றார்.
‘பண்டிகை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சமந்தா. ‘பண்டிகை’ பற்றி சமந்தா கூறுகையில், “பண்டிகை படத்தின் First look அருமையாக இருக்கிறது. இப்படம் வெற்றியடைய கிருஷ்ணா மற்றும் பண்டிகை படக் குழுவினரை வாழ்த்துகிறேன்…” என்று வாழ்த்தியுள்ளார்.
நாமும் வாழ்த்துகிறோம்..!