full screen background image

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராகிறார்…!

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராகிறார்…!

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் ‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படம் ‘கண்ணாமூச்சி’.

இந்தப் படத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்கவிருக்கிறார் என்பது இன்றைய தினத்தில் தமிழ்த் திரையுலகத்தை அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியப்படவும் வைத்திருக்கும் ஒரு செய்தி. இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குநரும் இவர்தான்.

பல்வேறு மொழி திரைப்படங்களில் பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.  அவர் திரையில் இதுவரையிலும் ஏற்று நடிக்காத ஒரு வேடத்தை ஏற்று இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். புதுமையான திரைக்கதையையும் அமைத்து தனது முதல் படமாக இந்த கண்ணாமூச்சி’ படம் மூலம் இயக்குர் அவதாரம் எடுக்கிறார்.

கண்ணாமூச்சி’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு தாங்கிய போஸ்டரை இன்று (18.10.2020 ஞாயிறு) காலையில்  அரசியல், சமூகம், விளையாட்டு மற்றும் திரை உலகை சார்ந்த பெண் பிரபலங்கள் பலரும் இணைந்து ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளனர்.  

படத்தின் தலைப்பை வெளியிட்ட பெண் பிரபலங்கள் :

நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு சுந்தர், சுகாசினி மணிரத்தினம், ஹேமா ருக்மணி, ரம்யா சுப்ரமணியம், ரேவதி, ஜோதிகா, சமந்தா, திரிஷா, சிம்ரன், சினேகா, தமன்னா,  லட்சுமி ராய், ஹன்சிகா, டாப்சி, அபிராமி, சாய் பல்லவி, ஆண்ட்ரியா, சுருதி ஹாசன், அக்சரா ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், கீர்த்தி சுரேஷ், ரெஜினா, காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன், அதிதி ரவிச்சந்திரன், பாவனா, திவ்யதர்ஷினி (டி.டி.) சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன், சாயிஷா, அதிதிராவ் ஹைதிரி, ஆர்த்தி ரவி, லட்சுமி மஞ்சு, சுஜாதா, கீதாஞ்சலி, கிக்சோனு, பாடகி சின்மயி, அப்சரா ரெட்டி, சாரதா ஸ்ரீநாத், பிருந்தா மாஸ்டர், வாசுகி, இயக்குநர்கள் காயத்ரி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கிருத்திகா உதயநிதி, விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, சிபி ஸ்ரீதேவி, பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சங்கீதா விஜய், ஆகிய ஐம்பது பேர்தான் இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டு சாதனை படைத்தவர்கள்.

Our Score