நடிகை வனிதா 6 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றுவதாக போலீஸ் கமிஷனரிடம் பிரபல சினிமா விநியோகஸ்தரான விப்ரன்ட் மூவிஸ் வெங்கடேஷ் ராஜா புகார் மனு அளித்துள்ளார்.
நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளாவின் மூத்த மகளும், நடிகையுமான வனிதா நேற்று முன்தினம் வினியோகஸ்தரான ஆர்.வெங்கடேஷ் ராஜா மீது, “நான் தற்போது தயாரித்து வெளியிட்டிருக்கும் ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம்’ என்ற படத்தை வெளியிடாமல் 30 லட்சம் ருபாய் மோசடி செய்துவிட்டார்..” என்று பரபரப்பு புகார் கூறியிருந்தார்.
நடிகை வனிதாவின் இந்தப் புகாருக்கு மறுப்பு தெரிவித்து, வினியோகஸ்தர் ஆர்.வெங்கடேஷ் ராஜா நேற்று கமிஷனர் அலுவலகத்தில் வனிதா மீதே புகார் அளித்துள்ளார்.
வெங்கடேஷ் அளித்த புகாரில், “கடந்த ஏப்ரல் 13-ம் தேதி நடிகை வனிதா என்னிடம், அவர் தயாரித்த ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டு உதவுமாறு கேட்டார். மேலும் படத்தை வெளியிடுவதற்கு ஆகும் மொத்த செலவையும் தானே தந்து விடுவதாக கூறினார்.
ஒப்பந்தத்தின்படி வனிதா கடந்த ஏப்ரல் 21-ம் தேதி 10 லட்சம் ரூபாயை காசோலையாக கொடுத்துவிட்டு மீதி பணத்தை ரீலிசுக்கு முன்பாக தந்துவிடுகிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அந்த நம்பிக்கையின் பேரில் நான் பணத்தை செலவழித்து படம் ரீலீஸ் ஆவதற்கு 16 லட்சம் ரூபாயை செலவு செய்து அனைத்து வேலைகளையும் செய்தேன்.
இந்தநிலையில் வனிதாவிடம் அவர் கொடுத்த அட்வான்சு தொகை போக நான் செலவழித்த 6 லட்சத்தை கடந்த 8-ம் தேதி கேட்டபோது, அவர் கொடுக்க முடியாது என்று கூறி எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். தற்போது என் மீதும் எனது நிறுவனம் மீதும் அவதூறு பரப்புகிறார்.
வனிதா மீது குற்ற நடவடிக்கை எடுத்து நான் செலவழித்த பணத்தில் அட்வான்ஸ் தொகை போக மீதம் உள்ள ரூ.6 லட்சத்தை வனிதாவிடம் இருந்து மீட்டு தாருங்கள்..” என்று கேட்டிருக்கிறார்.
சின்னப் பட்ஜெட் படங்கள் ரிலீஸாகவே வழியில்லைன்னு சொல்லிக்கிட்டிருக்கும்போது இப்படி சண்டை போட்டுக்கிட்டா எப்படி..?