கேரளாவில் இருந்தும் கடற்கரையையே பார்த்திராத ஹீரோயின்..!

கேரளாவில் இருந்தும் கடற்கரையையே பார்த்திராத ஹீரோயின்..!

GK  சினிமாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கத்தில் தயாராகி வருகிறது ‘பட்ற’ திரைப்படம். இதில் அறிமுக நாயகன் மிதுன், நாயகி வைதேகி, சாம் பால் மற்றும் பலர் நடித்துள்ளனர். எதற்கும் துணிந்த இளைஞர்களை ஆக்கத்திற்கு மாறாக அழிவிற்கும் பயன்படுத்தும் சமுதாய சூழ்நிலைகளை பற்றி எடுத்து கூறும் படம் இது.

actress vaidehi

படத்தின் ஹீரோயினான வைதேகி ஏற்கெனவே ‘விடியும்வரை பேசு’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது ‘வாத்து’, ‘ஆக்கம்’, ‘நனையாத மழையே’, ‘ஊதா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அவரது நடிப்பு அனுபவங்களை பற்றி கேட்டபோது,  “இந்தப் படத்தில் நான் ஒரு கல்லூரி செல்லும் பெண்ணாக வருகிறேன். எனக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. பரதம், கேரள நாட்டியம் என மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். எனக்கு ஜோடியாக வரும் கதாநாயகன் மிதுன் நன்றாக நடித்துள்ளார். எனது பள்ளி பரீட்சைகளின்போது ‘முன் காமம்’ என்ற காதல் பாடலின் ஷூட்டிங்கும் நடந்தது. இரண்டையும் மேனேஜ் செய்வதற்கு மிகவும் சிரமமாய் இருந்தது.

‘பட்ற’ படத்தில் நடித்தது புதிய அனுபவங்களை தந்தது. ஒரு நடிகையை இருப்பதால்தான் நிறைய இடங்களுக்கு செல்ல முடிகிறது. இதற்காகவே நான் பெரிய நடிகையாக வேண்டும்.. அதற்கு நன்றாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் வளர்ந்துள்ளது.

என்னதான் நான் கேரளாவில் இருந்தாலும் இதுவரையிலும் நான் கடற்கரையை பார்த்ததே இல்லை. எங்க அப்பாவிற்கு கடல் என்றால் பயம். அதனால் என்னை கடற்கரைக்கு அழைத்து சென்றதேயில்லை. பாண்டிசேரியில் நடந்த ‘பட்ற’ படத்தின் ஷூட்டிங் அன்றுதான், ஒரு கடற்கரை எப்படி இருக்கும் என்று என்னால் பார்க்க முடிந்தது…” என்று ஆச்சர்யம் கலந்த குரலில் கூறுகிறார் நாயகி வைதேகி. 

Our Score