நடிகை ஊர்வசிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாம்.
மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை விவாகரத்து செய்த பிறகு சென்ற வருடம்தான் அவருடைய குடும்ப நண்பரான சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்தார் ஊர்வசி. இந்தத் தகவலையே இந்தாண்டு மார்ச் மாதம்தான் பத்திரிகைகளுக்கு தெரிவித்திருந்தார் ஊர்வசி.
இதன் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் ஊர்வசி. விரைவில் வெளிவரவிருக்கும் ‘உத்தமவில்லன்’ படத்திலும் கமலுக்கு ஜோடியாகவே நடித்திருக்கிறார்..
கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் ஒத்துக் கொண்ட படங்களில் நடித்து முடித்துவிட்டு ஓய்வில் இருந்திருக்கிறார். நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.. தாயும், சேயும் மிக்க நலமாம்..
வாழ்த்துகள் ஊர்வசி மேடத்திற்கு..!