“இந்தப் படத்தில் செக்ஸியா நடிச்சிருக்கேன்..” – நடிகை த்ரிஷா பேட்டி..!

“இந்தப் படத்தில் செக்ஸியா நடிச்சிருக்கேன்..” – நடிகை த்ரிஷா பேட்டி..!

நாளை வெளியாக இருக்கும் 'அரண்மனை-2' படம் பற்றி படத்தில் நடித்திருக்கும் நடிகை த்ரிஷாவும், நடிகர் சூரியும் அளித்த பேட்டி இது.

நடிகை த்ரிஷா 'அரண்மனை-2' படம் பற்றிப் பேசுகையில், "சுந்தர்.சி படம்னாலே ஆடியன்ஸுக்கு ரொம்ப ஸ்பெஷல்தான். எனக்கும் இந்தப் படம் நிச்சயம் ஸ்பெஷல்தான். இந்தப் படத்தில் நடிச்சது எனக்கு புது அனுபவம். இதில் சில காட்சிகளில் செக்ஸியா வருவேன். செக்ஸி என்பதைவிட பியூட்டிஃபுல்லா என்னைக் காட்டிருக்காங்க என்றுதான் சொல்லணும்." என வெட்கப் புன்னகை வீசுகிறார் த்ரிஷா.

soori02

இந்தப் படத்தில் நடித்தது பற்றி நடிகர் சூரியிடம் கேட்டபோது, “காமெடியன்கள் எல்லோருக்குமே சுந்தர்.சி அண்ணன் படத்தில் நடிக்கணும்கிற ஆசை இருக்கு. எனக்குள் இருந்த அந்த ஆசை ‘அரண்மனை-2’ மூலமாக நிறைவேறியிருக்கு.

நிஜத்தில் என்னோட அக்காவாக நினைத்து நான் பெரிதும் மதிக்கும் கோவை சரளா என்னோட காதலியா நடிச்சிருக்காங்க. படத்தில் 25 வருஷம் கழித்து அவங்களை சந்திக்கும்போதும், ‘வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்னை விட்டுப் போகலை’ன்னு என்னை பார்த்து அவங்கவிடும் லுக்கில் ஆடியன்ஸிடமிருந்து அப்ளாஸ் அள்ளும்.." என்கிறார்.

kusbhoo-1

படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு கூறுகையில், “அரண்மனை’யைவிட ‘அரண்மனை-2’ பிரமாண்டமா இருக்கணும்கிற முடிவோடதான் இந்த படத்தை தயாரித்திருக்கோம்.  

தயாரிப்பாளர், இயக்குநராக இருபது வருஷத்துக்கும் மேலாக சுந்தர்.சி சார் இருப்பது, அவரோட மனைவியா நான் பெருமைப்படும் விஷயம். இந்தப் படத்தில் வரும் அம்மன் பாட்டை கேட்டுவிட்டு எனக்கு சிலிர்த்துவிட்டது. அந்த சிலிர்ப்பை அத்தனை ரசிகர்களும் அனுபவிக்கப் போவது நிச்சயம்..” என்றார் உறுதியாக.

ஆக மொத்தம்.. படத்துல வர்ற அத்தனை பேருமே பேயாத்தான் நடிச்சிருப்பாங்க போலிருக்கு..!