அதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..!

அதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த டாப்ஸி..!

போகிறபோக்கைப் பார்த்தால் நடிகை டாப்சி பாலிவுட்டில் முதலிடத்தைப் பிடித்துவிடுவார் போலிருக்கிறது.

பாலிவுட் நடிகர்களின் சம்பளம் 100 கோடியைத் தாண்டி போனாலும் நடிகைகளின் சம்பளம் அதிகமே 10 கோடிக்குள்தான் இன்னமும் இருக்கிறது.

ஒரு காலத்தில் ஐஸ்வர்யா ராய்தான் அதிகச் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார். பின்பு அவரை ஓரங்கட்டிவிட்டு கரீனா கபூர் அந்த இடத்தைப் பிடித்தார். இவருக்குப் பின்பு தீபிகா படுகோனே முன்னுக்கு வந்தார். அவரை அடுத்து வந்த கங்கனா ரணாவத் அந்த இடத்தை எட்டிப் பிடித்தார். இப்போது கங்கனாவுடன் போட்டிக்கு நிற்கிறார் டாப்சி.

பாலிவுட்டில் டாப்சி கடைசியாக நடித்திருந்த 6 இந்தி படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்றதால், இந்திப் படவுலகின் தற்போதைக்கு ராசியான கதாநாயகியாக டாப்சி உயர்ந்திருக்கிறார். மேலும் கால்ஷீட் குளறுபடி, காதல் தகராறுகள் என்று எதுவுமில்லாமல் டாப்சி நீ்ட்டாக இருப்பதால் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் பிடித்தமானவராக மாறிவிட்டார்.

இதனால் தன்னுடைய சம்பளத்தையும் தற்போது 5 கோடியில் இருந்து 8 கோடியாக உயர்த்திவிட்டாராம் டாப்சி. டாப்சி தற்போது ரேஷ்மி ராக்கெட்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் வியாபாரமும் எதிர்பாராத அளவுக்கு ஹிட்டாகிவிட்டதால்தான் டாப்சி சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன.

இதே நேரம் அதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் தற்போதைக்கு கங்கனா ரனாவத், கரீனா கபூர், டாப்சி மூவரும் ஒரே அந்தஸ்தில்தான் உள்ளனர். இராமாயணக் கதையில் சீதையாக நடிக்க கரீனா கபூர் 12 கோடி கேட்டிருப்பதாக ஒரு செய்தி வந்திருந்தது. அது உண்மையானால் கரீனா இவர்களை மிக எளிதாகத் தாண்டிச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.

Our Score