தமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…!

தமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…!

'தேவா'வில் விஜய்யுடனும், 'வான்மதி'யில் அஜீத்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இந்த இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை இவருக்குத் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இதற்குப் பின்பு ‘செல்வா’, ‘மாப்பிள்ளை கவுண்டர்’, ‘மை இந்தியா’, ‘நாட்டுப்புற நாயகன்’, ‘சுந்தரபாண்டியன்’, ‘துள்ளித் திரிந்த காலம்’, ‘ஹவுஸ்புல்’, ‘உன்னைத் தேடி’, ‘அண்ணன்’, ‘பொன்விழா’, ‘அசத்தல்’, ‘சொன்னால்தான் காதலா’, ‘சொக்கத் தங்கம்’ ஆகிய குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார்.

இடையில் 2009-ம் ஆண்டு கிரண் என்னும் தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் குடியேறினார் ஸ்வாதி. தற்போது ஸ்வாதிக்கு 5 வயதில் விஹான் என்ற மகன் இருக்கிறார்.

ஸ்வாதி நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீரின் இயக்கத்தில் வெளியான 'யோகி' படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

actress swathi

தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இப்போதும் ஆர்வமாக உள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவும் ஆர்வமாக உள்ளார்.

தனது ரீ எண்ட்ரி குறித்து ஸ்வாதி பேசுகையில், “நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவீர்கள்? என்று ஆவலுடன் கேட்கிறார்கள். வெளியில் 'மேக்கப்' இல்லாமல் சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இத்தனை வருடம் கழித்தும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள்.

அப்படி ஒரு பயணத்தின்போது ஒரு தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பிலிருந்துதான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள்.

actress swathi

நான் அவ்வப்பொழுது தமிழ்ப் படங்களைப் பார்த்து வருகிறேன். முன்பைவிட இப்பொழுதுள்ள சினிமா தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. 'பாகுபலி' போன்ற படங்கள் உலகளவில் பேசப்பட்டது.

பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தாலும் சினிமா என்றும் அழியாமல் நிரந்தரமாக இருக்கும். சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். என் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன். வாய்ப்புகள் கிடைக்கும்பட்சத்தில் வெள்ளித்திரையில் ரசிகர்கள் விரைவில் என்னைக் காணலாம்..” என்று சந்தோஷத்துடன் கூறுகிறார்.