“தென்னிந்திய சினிமாவில்தான் ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’டுக்கான அழைப்புகள் அதிகம்…”-அனுபவப்பட்ட நடிகை சொல்கிறார்..!

“தென்னிந்திய சினிமாவில்தான் ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’டுக்கான அழைப்புகள் அதிகம்…”-அனுபவப்பட்ட நடிகை சொல்கிறார்..!

சுர்வீன் சாவ்லா. இந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கும் ‘ஜெய்ஹிந்த்-2’ திரைப்படத்தின் ஹீரோயின். இதற்கு முன்பு ஹேட் ஸ்டோரி-2 இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Actress Surveen Chawla in Jaihind 2 Tamil Movie Stills

‘ஹேட் ஸ்டோரி-2’ படத்தில் சுர்வீன் காட்டிய கவர்ச்சி எல்லை மீறியது.. லிப் டூ லிப் கிஸ்.. பிகினி டிரஸ்.. ஹீரோவுடன் உறவு கொள்வது போன்ற காட்சிகளிலெல்லாம் பின்னி பிணைந்து நடித்திருந்தார். இதனாலேயே அந்தப் படம் பெரிய ஓட்டம் ஓடியது..!

பஞ்சாபை சேர்ந்த சீக்கியர் இனப் பெண்ணான சுர்வீன் சாவ்லா முதலில் தொலைக்காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று கிடைத்த ஒரு இந்தி பட வாய்ப்பை உடும்பாகப் பிடித்துக் கொண்டு ஒரே நாள் இரவில் இந்தியா முழுக்க பிரபலமாகிவிட்டார்.

சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியொன்றில் இவர் சொல்லியிருக்கும் விஷயம்தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

“சினிமா துறையில் நடிகைகளுக்கு நடிக்க வாய்ப்பு தருகிறவர்கள், பதிலுக்கு படுக்கைவரையிலும் அழைப்பார்கள் என்று சொல்லப்படுகிறதே…?” என்ற கேள்விக்கு சுர்வீன் அளித்துள்ள பதிலில், “நான் இங்கு நிறைய கஷ்டப்பட்டிருக்கேன். சில அனுபவங்கள் இன்றும் ஆறாமல் இருக்கின்றன. சினிமா வாய்ப்புக்காக வேறு மாதிரி அட்ஜஸ்ட் செய்து கொள்ளச் சொன்னவர்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் இது அதிகம். ஆனால் இப்போது நான் அது மாதிரியான அநாகரிக விண்ணப்பங்களை எப்படி கையாளுவது என்பதை கற்றுக் கொண்டிருக்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

இந்த ‘அட்ஜெஸ்மெண்ட்’டுகள் சினிமா துறையில் மட்டுமல்ல பல துறைகளிலும் சகஜமாகவே இப்போது இருக்கிறது என்றாலும், சினிமாவில் இருப்பது மட்டுமே பிரபலமாகியிருக்கிறது.

‘தென்னிந்திய சினிமாவில்தான் இந்த அட்ஜெஸ்மெண்ட்டுகளுக்கான அழைப்புகள் அதிகம்’ என்று சுர்வீன் சொல்லியிருப்பது சுருக்கென்று இருக்கிறது..!

இப்படியாய்யா மானத்தை வாங்குவீங்க..?

Our Score