full screen background image

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தில் சினேகாவும் நடிக்கிறாராம்

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தில் சினேகாவும் நடிக்கிறாராம்

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை சினேகா நடிக்கவுள்ளார்.

‘ரெமோ’ படத்தையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தையும் 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவே தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தை மோகன்ராஜா இயக்கவுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

Sivakarthikeyan-mohan-raja-hipop-tamizha

இவர்களுடன் பாஹத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் மற்றும் தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கவிருக்கிறார்கள். மேலும், ஒரு மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை சினேகாவும் நடிக்கப் போகிறாராம்.

mohan-raja-1

“தான் நடிக்கும் கேரக்டரை தன் மனதுக்குள் உள்வாங்கினால் மட்டுமே, அந்த அந்தக் கதாப்பாத்திரத்தை கனக்கச்சிதமாக திரையில் பிரதிபலிக்க முடியும். அப்படி நடிக்கக் கூடிய ஒரு நடிகைதான் சினேகா. இந்த படத்தின் கதையை நாங்கள் எழுதும்போதே இந்த கதாப்பாத்திரத்தில் சினேகாதான் நடிக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். சினேகாவும் எங்கள் படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பு கொண்டுவிட்டார். எங்களின் ஒட்டு மொத்த படக் குழுவினரின் சார்பிலும் அவர்களை அன்போடு வரவேற்கிறோம். வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பை நாங்கள் தொடங்க இருக்கிறோம்…” என்கிறார் இயக்குநர் மோகன்ராஜா.

snekha-2

“சினிமாவில் நான் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் படம் ஒரு  மிகப் பெரிய திரைப்படமாக இருக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். ஆனால் இந்த திரைப்படமோ பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சவாலான கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு என்னை தேர்வு செய்த இயக்குநர் மோகன்ராஜா சாருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நிச்சயமாக என்னுடைய இந்த கதாப்பாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…” என்கிறார் ‘புன்னகை இளவரசி’யான சினேகா.

Our Score