வெங்கட் பிரபுவின் பயிற்சியில் உருவாகியிருக்கும் 17 வயது நடிகை சனா அல்தாப் 

வெங்கட் பிரபுவின் பயிற்சியில் உருவாகியிருக்கும் 17 வயது நடிகை சனா அல்தாப் 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான  நயன்தாரா முதல், தற்போதைய மஞ்சிமா மோகன்வரை பல பெண் நட்சத்திரங்கள், கேரளாவில் இருந்துதான் உதயமாகி வந்திருக்கின்றனர்.

தற்போது அந்த வரிசையில் ‘சென்னை – 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கும் 17 வயது நிரம்பிய சனா அல்தாப்பும் சேர்ந்திருக்கிறார். இவர் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

sana-althab-3

இந்தப் படத்தில் நடித்த்து பற்றி நடிகை சனா அல்தாப் பேசுகையில், “இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக  அனுராதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வெறும் கவர்ச்சி மூலம் படத்தை ஒப்பேற்றும் ஒரு சாதாரண கதாபாத்திரமாக இல்லாமல், கதை களத்தை மேற்கொண்டு நகர்த்த கூடிய வலுவான வேடமாக என்னுடைய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.

sana-althab-4

என்னுடைய பள்ளி பொது தேர்வினால் நான் சில மாதங்கள்  நடிப்பில் இருந்து விலகியிருக்கும் சூழ்நிலை இருந்தது. அதன் காரணமாக என்னால்  நடிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் வெங்கட் பிரபு சார் எனக்கு அளித்த தன்னம்பிக்கையும், ஊக்குவித்தலும்தான் என்னை மீண்டும் நடிப்பில் களம் இறக்கியது.

sana-althab-2

ஆரம்பத்தில் தமிழ் மொழி எனக்கு சிறிது கடினமாக இருந்தாலும், வெங்கட் பிரபு சார் கொடுத்த முறையான பயிற்சி அந்தக் கஷ்டத்தை  எளிதாகி விட்டது. கலைஞர்களுக்கு சிறந்த ஆசானாக திகழ்பவர் வெங்கட் பிரபு சார்.

தமிழ் திரையுலகில் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கும் எனக்கு, இந்த ‘சென்னை – 28 – II’ திரைப்படம் சிறந்த அடித்தளமாக அமையும் என்று நம்புகிறேன்…” என்றார்.

Our Score