‘வெண்நிலா வீடு’, ‘ஐவராட்டம்’, ‘CSK’ போன்ற வெற்றிப் படங்களை உலகெங்கும் வினியோகம் செய்து பெயர் பெற்றது வெங்கடேஷ் ராஜாவின் ‘தி வைப்ரன்ட் மூவிஸ்’ நிறுவனம்.
எப்போதும் பெயர் பெறும் படங்களையே விநியோகம் செய்து புகழடையும் இந்த வைப்ரன்ட் மூவிஸ், தற்போது இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய B.சுரேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ‘பேபி’ என்னும் புதிய படத்தை உலகெங்கும் வினியோகம் செய்யவுள்ளது.
இப்படத்தின் Digital Motion Poster வரும் ஏப்ரல் 6-ம் தேதி அன்று சரியாக மாலை 6 மணி 6-வது நிமிடத்தில் நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.
6-ம் தேதி, 6 மணி, 6 நிமிடம்..
இதற்கு மேலும் இப்படத்தின் கதையை பற்றி சொல்ல வேண்டுமா என்ன???