‘ஜிகர்தண்டா’ வெற்றி விழாவில் நடிகர் சித்தார்த் இந்த வருஷம் கல்யாணம் கன்பார்ம் என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால் பொண்ணு நடிகையா, இல்லை என்பதை சொல்ல மறுத்துவிட்டார்.
இன்னொரு பக்கம் சித்தார்த்துடன் இணைத்து பேசப்படும் நடிகை சமந்தா தனது திருமணம் காதல் திருமணம்தான் என்று அடித்துச் சொல்கிறார். ஆனால் அவர் நடிகரா இல்லையா என்பதைச் சொல்லவில்லை..
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “சில வருடங்களுக்கு முன்பு ஒருத்தரை ஒரு தலையா காதலிச்சேன். அவர் நடிகர் இல்ல.. நான் என் காதலை அவரிடம் தெரிவித்தபோது அவர் ‘நோ’ன்னு சொல்லி்டடாரு.. நானும் அதை ஈஸியா எடுத்துக்கிட்டேன்..
இனிமேல் நான் நிச்சயமா காதல் கல்யாணம்தான் செய்யப் போறேன்.. வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு பையன் இருக்கான்.. ஆனா மூன்று வருடங்கள் கழித்துதான் திருமணம் செய்து கொள்வேன்..!” என்று சொல்லியிருக்கிறார் சமந்தா.
ம்.. எழுத்தாளர்களெல்லாம் சினிமாக்காரங்ககிட்டதான் சஸ்பென்ஸ் வைக்கிறது எப்படின்னு கத்துக்கிடணும்..!!!