வதந்திகளைப் பரப்பும் வதந்தியாளர்களைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார் நடிகை சமந்தா.
நடிகை சமந்தா தனது கணவரான நாக சைதன்யாவிடமிருந்து பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார். என்றாலும் இன்னமும் முறைப்படி இருவரும் விவகாரத்து கோரி வழக்கு தொடரவில்லை.
இந்த நிலையில் நாக சைதன்யாவுக்கும் பிரபல பாலிவுட் நடிகையான சோபிதா துலிபலாவுக்கும் இடையில் காதல் மலர்ந்திருப்பதாக தெலுங்கு பத்திரிகைகளில் செய்திகள் ரெக்கை கட்டி பறந்து வருகின்றன.
இந்தச் செய்திகளை இப்படி பரப்புரை செய்து வருவதே சமந்தாவின் ரசிகர்கள்தான் என்று நாக சைதன்யாவின் ரசிகர்கள் திடீர் என்று போர்க் கொடி தூக்க.. இரு தரப்பு ரசிகர்களிடையேயும் டிவிட்டரில் பெரும் சண்டையே நடந்து வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து நடிகை சமந்தா கருத்துத் தெரிவித்துள்ளார்.
“பெண் பற்றிய வதந்திகள் உண்மையாக இருக்க வேண்டும். ஆண் பற்றிய வதந்தி பெண்களால் விதைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வளருங்கள்… சம்பந்தப்பட்டவர்கள் நகர்ந்து விட்டார்கள். நீங்களும் நகருங்கள். உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்.. போங்கள்…” என்று கோபமாக எழுதியுள்ளார் நடிகை சமந்தா.
நாக சைதன்யாவுடன் கிசுகிசுக்கப்படும் நடிகை ஷோபிதா துலிபலா சமீபத்தில் வெளிவந்த தெலுங்குப் படமான ‘மேஜர்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில ஹிந்தி, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.