அழகும், திறமையும் ஒருங்கே வாய்க்க பெற்ற, ரசிகர்களை தன் அபார அழகால் கவர்ந்து இழுக்கும் துறுதுறு நடிகை ரெஜினா கஸாண்ட்ரா.
பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் ரெஜினா, எளிதாக எந்த ஒரு வேடத்திலும் பொருந்தி போகக் கூடியவர். தமிழ் சினிமாவில் தன் அதிர்ஷ்ட தேவதையாக வலம் வரும் இவர், நடித்தாலே அந்த படமும் வெற்றி படமாக மாறுவது தனிச்சிறப்பு.
‘மாநகரம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வரும் மே 12-ம் தேதியன்று வெளியாகவிருக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரெஜினா.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசிய நடிகை ரெஜினா, “இயக்குநர் எழில் ஸார் படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். நடிகைகளுக்கு மிகவும் சௌகர்யமான இயக்குநர் அவர். வணிக ரீதியான படத்துக்கு தேவையான அளவில் சிறப்பாக திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர்.
படத்தில் எனக்கும், உதயநிதிக்கும் பொருத்தமான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. உதயநிதி மிகவும் எளிமையான மனிதர். அவரின் நகைச்சுவை உணர்வு அலாதியானது. அவரோடு நடித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம்…” என தன் ஹீரோ உதயநிதியை பற்றியும் புகழ்ந்து பேசுகிறார்.
“சரவணன் இருக்க பயமேன்’ ஒரு முழு நீள பொழுதுபோக்கு படம். கோடை காலத்தில் குடும்பத்தோடு வந்து பார்த்து ரசிக்கும்வகையில் இருக்கும். இமானின் அற்புத இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. இசை மட்டுமல்லாமல் யுகபாரதியின் பாடல் வரிகளும் பேசப்படும்…” என்கிறார் ‘தென்னிந்தியாவின் ஜூலியா ராபர்ட்ஸ்’ என்று திரையுலகத்தினார் புகழப்படும் இந்த அழகுப் புயல்.