full screen background image

‘ஓ போடு’ ராணியின் அடுத்த ஆட்டம்..!

‘ஓ போடு’ ராணியின் அடுத்த ஆட்டம்..!

ராமராஜன் ஜோடியாக ‘வில்லுப் பாட்டுக்காரன்’ படத்தில் அறிமுகமானவர் ராணி. அதன் பிறகு குத்துப்பட்டு, கிளாமர் பாட்டு, வில்லி வேஷம் என்று எல்லா மொழிகளிலும் சேர்த்து 400 படங்களுக்கு மேல் நடித்து முடித்துவிட்ட அவர் சில காலம் நடிப்பதை நிறுத்தி இருந்தார். ஆடிய காலும், பேசிய வாயும் அமைதியாக இருக்காது என்பார்கள். உண்மைதான்.

Actress Rani (1)

தமிழில் நடிப்பதை நிறுத்தினாலும், தெலுங்கில் கல்லா கட்டிக் கொண்டுதான் இருந்தார் ராணி. ஆந்திராவில் 2011- ல் அவர் நடித்த ‘நட்சாவுலே’ படத்திற்காக நந்தி விருதை பெற்ற அவர் தற்போது அனுஷ்கா நடிக்கும் ‘ராணி ருத்ரம்மா தேவி’, ‘பிரேம்ல பட்டாண்டி’, ‘ஒக லைலா கோசம்’, ‘3 இடியட்ஸ்’ போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது தெலுங்கு மட்டும் போதாதென்று அடுத்து தனது தாய் மொழியான தமிழிலும் கவனம் செலுத்த இருக்கிறார் ராணி.

Actress Rani (2)

‘காதல் கோட்டை’ படத்தில் ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’, ‘ஜெமினி’ படத்தின் வெற்றிக்கே காரணமாக இருந்த ‘ஓ போடு, ஓ போடு’ மாதிரியான ஒற்றை பாடல்களுக்கு ஆட ஐடியா உண்டா என்று கேள்வியை முடிக்கும் முன்பே, மறுத்த அவர் “ஸாரி… இனிமேல் நோ குத்து டான்ஸ்.. அயிட்டம் டான்ஸ்..! ஒன்லி காரக்டர்ஸ் மட்டும்தான்… அம்மாவா, அக்காவா, அண்ணியா, வில்லியா எதுவானாலும் ஓ.கே. நான் ரெடி நீங்க ரெடியா..?” என்கிறார் ராணி.

நேத்து சாயந்தரம் அமலா.. நேத்து ராத்திரி ஜோதிகா. இன்னிக்கு காலைல ராணி.. அடுத்தது யாரோ..?

Our Score