full screen background image

போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை சுந்தர்.C-க்கு ஜோடியாக நடிக்கிறார்

போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை சுந்தர்.C-க்கு ஜோடியாக நடிக்கிறார்

24 HRS புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஒன் 2 ஒன்.’

இந்தப் படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கிறார். இவர் சமீபத்தில்தான் போதை மருந்து கடத்தல் வழக்கில் பெங்களூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தயாரிப்பு – 24 HRS புரொடக்‌ஷன்ஸ், எழுத்து, இயக்கம் – K.திருஞானம், ஒளிப்பதிவு – விக்ரம் மோகன், இசை – சித்தார்த் விபின், கலை இயக்கம் – R.ஜெனார்த்தனன், உடைகள் வடிவமைப்பு – நிவேதிதா, தயாரிப்பு நிர்வாகம் – விஜய், சண்டை இயக்கம் – “Rugger” ராம், நடன இயக்கம் – தீனா, புகைப்படங்கள் – பாக்யா, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).

திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு’ படத்தை தொடர்ந்து இயக்குநர் K.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது.

மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த நடிகர் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Our Score