Cameo Films நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகி வரும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படம் அனைவரையும் கவரும் தலைப்பு முதல் கண்கவர் நடிகர்கள் என இளைய நெஞ்சங்களை ஆட்கொண்டுள்ளது.
நல்ல கமர்ஷியல் படங்களை தெரிவு செய்து வெளியிடுவதில் கவனம் செலுத்தும் Studio Green நிறுவனர் K.E. ஞானவேல் ராஜா ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை வெளியிடுகிறார். ஏற்கனவே, டீசர் மூலம் தங்களுக்கான ஆதரவை திரட்டியிருக்கும் இப்படம். ரசிகர்கள் அனைவரையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்த தெறிக்கும் இசையை வரும் ஜூன் 4-ம் தேதியன்று சோனி மியுசிக் நிறுவனம் வெளியிடுகிறது.
நாயகி ப்ரியா ஆனந்த் கௌரவ தோற்றத்தில் நடிப்பதன் மூலம் மேலும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படம்.
இது குறித்து பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆழகிய நடிப்பை வெளிக்கொண்டுவரும் நாயகி வேண்டும் என்று எண்ணினோம். ப்ரியா ஆனந்த் இந்தக் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினார். தனக்கே உரியா உற்சாகத்தாலும், குதுகலத்தாலும் மொத்த படக் குழுவையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார் ப்ரியா ஆனந்த்.” என்றார்.