full screen background image

நடிகை பூஜாவை ஒருதலையாய் காதலிக்கும் ஹீரோ-இயக்குநர்..!

நடிகை பூஜாவை ஒருதலையாய் காதலிக்கும் ஹீரோ-இயக்குநர்..!

தைரியமான நடிகைன்னா அது பூஜாதான்னு இனிமே தைரியமா நாமளும் சொல்லிரலாம்..! பொதுவாக நடிகைகள் மேடைகளில் பேச நினைக்காதவைகளையும், செய்யக் கூடாதவைகளையும் சேர்த்து வைத்து இன்றைக்கு பேசினார்.. செய்தார்..!

பூஜாவும், புதுமுக நடிகர் ராஜும் இணைந்து நடித்த ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் முதலிலேயே பேச வந்த பூஜா பேசியவைதான் இன்றைய கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்..!

இனி பூஜாவின் பேச்சு :

“நான் ஏன் இங்க வந்திருக்கேன்னா… ராஜ் என்னோட காலேஜ்மெட். அது மட்டுமில்ல… பதினாறு வருஷத்துக்கு முன்னாடி என்னை உருகி உருகி காதலிச்சவன்.  நான் பெங்களூரில் கல்லூரியில் படித்தபோது ராஜை தெரியும்.

நான் பெண்கள் கல்லூரி. அவன் படித்தது ஆண்கள்-பெண்கள் படிக்கும் கோ-எட் கல்லூரி. ஒரு  கல்ச்சுரல்-கலை நிகழ்ச்சியின்போது அவனைப் பார்த்தேன். அவனுக்கு என்னைப் பிடிக்கும். எங்களுக்குள் ஈர்ப்பு இருந்தது. ஆனால் அது காதல் இல்லை. அப்போது எனக்கு 16 வயதுதான். அப்போது காதல் பற்றி தெரியாத வயது.

pooja-raj

‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’ன்னு ஒரு முறை சொன்னான். இன்னொரு முறை ஏதோ பேசினான். நான் ‘போடா’ன்னு சொன்னேன். எங்களுக்குள் நட்பு இருந்தது. ஆனால் காதல் இல்லை..

எந்த ஆண் பையனுடன் பழக்கம் வேண்டாம் என்பது எனக்கு அப்பாவின் கண்டிப்பான உத்தரவு.  படிப்புதான் முக்கியம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பார். அதனால் எனக்கு யார் கூடவும் காதல் இல்லை. அப்படித்தான் ஒரு ஆரோக்கியமான நட்பு எங்களுக்குள் இருக்கிறது.

ஒரு நாள் ராஜ், ‘நான் படமெடுக்கிறேன்’னு சொன்னான். ‘என்னடா… நம்பவே முடியலையே..?’ என்றேன். ‘படம் டைரக்சன் பண்றேன். நான்தான் தயாரிப்பாளர்’ என்றான். ‘பொய் சொல்லாதே’ன்னேன். ‘உண்மைதான்’னு சொன்னான். ‘எனக்கு ஒரு உதவி செய்’ன்னு கேட்டான். ‘காசு மட்டும் கேட்காதே.. என்கிட்ட பணமில்லைன்னு’ சொன்னேன். ‘நீ இந்தப் படத்துல ஒரு கேமியோ ரோல் பண்ணணும்’னான். உடனே ஓகே சொன்னேன். அவ்வளவுதான்.

3 நாள் படப்பிடிப்பு போனேன். ராஜ் என்னோட பதினாறு வயசுல இருந்தே நண்பன்… அவன் படமெடுப்பதில் எனக்கு  மிக்க மகிழ்ச்சி. இந்த ராஜ், தங்கமான மனசுக்காரன். இவனது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்று சொல்லி மேடையில் இருந்தே இயக்குநருக்கு பிளையிங் கிஸ் ஒன்றை பறக்கவிட்டார் பூஜா.

அவருக்குப் பின் பேசிய நடிகர், இயக்குநர் ராஜ் முதலில் ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார்.. “எங்களது நிறுவனத்தின் முதல் முயற்சி இது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. இந்த விழாவுக்கு 1000 பேரைக் கூப்பிட்டேன். கொஞ்சம் சில பேர்தான் வந்திருக்கிறார்கள். ஆர்யாவை நடிக்க  கூப்பிட்டேன்.. அவர் ரொம்ப நாள் காக்க வைத்து ஏமாற்றிவிட்டார்…” என்று சொல்லும்போதே எழுந்து வந்து மைக்கை பிடித்த பூஜா, “ஏண்டா.. இப்படி இப்படி கை, கால் எல்லாம் ஆடுது..? டான்ஸ் ஆடாதே. நேரா நின்னு பேசுடா.. ஒழுங்கா முதல்ல வந்தவர்களை வரவேற்று விட்டுப் பேசு.. அதுவும் தமிழில் பேசு… நீ என்ன மடத்தனமா பேசிக்கிட்டிருக்க…? முதல் படம.. இப்படியா பேசுறது..? ‘இது எனக்கு முதல் படம். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க. படத்தை பற்றி நல்லா பிரமோட் பண்ணி கொடுங்க’ன்னு கேட்க வேணாமா..? அதை விட்டுட்டு என்னன்னலாமோ பேசிக்கிட்டிருக்கே..?” என்று டென்ஷனாகி அட்வைஸ் செய்துவிட்டுப் போனார்.

சங்கடப்பட்டு போன இயக்குநர் ராஜ், வேறு வழியில்லாமல் மேலும் தமிழில் தொடர்ந்து பேசினார்..  பேச்சோடு பேச்சாக, ‘பூஜா… ஸ்டில் ஐ லவ் யூ’ என்று இயக்குநர் ராஜ் மைக்கிலேயே சொல்ல… உதைப்பேன் என்பது போல சைகை செய்தார் பூஜா.

ஆக.. இயக்குநர் ராஜின் காதல் அப்ளிகேஷன் இனிமேலாவது பூஜாவிடம் ஓகே ஆகுமா..? ஆகாதா? என்பதை நாமளே கணக்குப் போட்டு பார்த்துக்கலாம்னு மறைமுகமா சொல்லிட்டுப் போயிருக்காங்க ரெண்டு பேரும்..! 

Our Score