இயக்குநர் எழிலின் இயக்கத்தில் நிகிஷா பட்டேல் நடிக்கும் புதிய படம்

இயக்குநர் எழிலின் இயக்கத்தில் நிகிஷா பட்டேல் நடிக்கும் புதிய படம்

தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார் நடிகை நிகிஷா படேல்.

அரவிந்தசாமி நடிப்பில் வெளியான ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நிகிஷா படேல் தற்போது இயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷோடு நடித்து வருகிறார்.  

எழில் இயக்கும் படம் எதுவாக இருந்தாலும் அதில் ஹீரோவிற்கு போலவே ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும்.

இந்தப் படத்தில் நடிப்பது பற்றி நடிகை நிகிஷா படேல் பேசும்போது, “இந்தப் படத்தில் நான் ஒரு ஐ.டி. நிறுவன ஊழியராக நடிக்கிறேன். படத்தின் நகைச்சுவை பகுதியின் ஆன்மாவே நான்தான் என்று சொல்லலாம். முதல் நாள் படப்பிடிப்பில் நான் யோகா செய்யும் காட்சி படமாக்கட்டது. ஜி.வி.பிரகாஷுடன் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அவர் தனி நபராகவும், திரை நட்சத்திரமாகவும் நேசிக்கத்தக்க நபர். அவருடைய காமெடி டைமிங் எல்லாம் ஜோர். 

எழில் சாருடைய படங்கள் எப்போதுமே குடும்பத்துடன் ரசிக்கும் அளவுக்கும் இருக்கும். பிரச்சினைகளை மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். எழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன்.

எத்தனையோ கதைகள் பற்றி ஆலோசித்திருந்தாலும் இந்த கேரக்டர் எனக்குப் பொருந்திப் போயிற்று. எழில் சார் மிகவும் அமைதியான நபர். கடினமாக உழைக்கும் இயக்குநரும் கூட. இந்தக் கதையை எழில் சார் சிறப்பாக எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் நாங்கள் ஒன்றாகப் பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி. இன்னும் நிறைய படங்களில் அவருடன் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன்…” என்றார் நிகிஷா படேல்.

 

Our Score