அல்போன்ஸ் புத்திரனின் ‘பாட்டு’ படத்தில் நயன்தாரா நடிக்கிறார்..!

அல்போன்ஸ் புத்திரனின் ‘பாட்டு’ படத்தில் நயன்தாரா நடிக்கிறார்..!

மலையாளத் திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்தப் படத்தில் நயன்தாரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

‘நேரம்’, ‘பிரேமம்’ என்ற அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், மூன்றாவதாக ‘பாட்டு’ என்னும் பெயரில் புதிய படத்தைத் தயாரித்து, இயக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க இசை சம்பந்தப்பட்ட திரைப்படமாம். இந்தப் படத்தில் நாயகனாக பஹத் பாசில் நடிக்கவிருக்கிறார் என்பதையும் சொல்லியிருந்தார்.

இப்போது நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்பதை அறித்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன்.

இது மலையாளத்தில் மட்டுமே தயாராகும் திரைப்படமாம். மற்றைய தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் விவரம் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக மொத்தத்தில், இப்போதைக்கு விக்னேஷ் சிவனை மாப்பிள்ளை கோலத்தில் பார்க்க முடியாது போலிருக்கு..!!!

Our Score