full screen background image

‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தில் ‘பேய்’ இவங்கதான்..!

‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தில் ‘பேய்’ இவங்கதான்..!

மொஹர்னா அனிதா ரெட்டி. சர்வதேச விளம்பர துறையில் மட்டுமின்றி தியேட்டர்  நாடகங்களிலும் மிகவும்  பிரசித்தி பெற்ற நடிகை. இவர் தற்போது ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.

சிறிய படம் என்ற போதிலும் படமாக்கப்பட்ட விதத்திலும், கதை அமைப்பினாலும்  எல்லோரையும்  கவரும்வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.

இந்தப் படத்தில் அனு, தீபக் பரமேஷ், ஜாக்குலீன் பிரகாஷ், குணாலன் மோகன், அனிதா ரெட்டி, மைம் கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மணீஷ்மூர்த்தி, இசை – சிவசரவணன், பாடல்கள் – ஜிகேபி, ஸ்ரீனிக் விஸ்வநாதன், பாடியவர்கள் – ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், வேல்முருகன், கலை இயக்கம் – CH மோகன்ஜி, படத்தொகுப்பு – ஹரிஹரன், கதை – எம்.ஆர்.கே.-ஸ்ரீநாத் ராமலிங்கம், இயக்கம் – ஸ்ரீநாத் ராமலிங்கம், தயாரிப்பு – N ஷண்முகசுந்தரம் , K முகமது யாசின், தயாரிப்பு நிறுவனம்   ஜூனா பிக்சர்ஸ் பிரைவட் லிமிடெட். வெளியிடுவோர்     -Auraa Cinemas.

இந்தப் படத்தில் நடித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் இதில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை மொஹர்னா அனிதா ரெட்டி.

“இந்தப் படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லை. நாம் அன்றாடம் சந்திக்கும் கேரக்டர்தான் என்றாலும், இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் அந்தக் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை என்னிடம் விவரிக்கும்போது அந்த பாத்திரத்தின் வீரியத்தை புரிந்துக் கொண்ட நான்  ‘அந்த வேடத்தில்  நடிக்க   போவது  யார்..?’  என்று அவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். கதையை சொல்லி முடித்ததும்  தீர்மானமாக சொன்னார் ‘நீதான்’ என்று..!.

நான் ஆரம்பத்தில் சற்றே  தயங்கினாலும் அவர் எனக்கு ஊட்டிய தன்னம்பிக்கை காரணமாக அந்த வேடத்தை ஏற்றுக் கொண்டு  நடித்தேன். படப்பிடிப்பு முடிந்து, படம் பார்த்த பின்னர்  எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  

திருமணமாகி குழந்தை  பேறு இல்லாமல் தவிக்கும், சமுதாயத்தின் மேல் தட்டில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் பாத்திரத்தில் நடிக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு சமுதாயத்தில் நடக்கும் அவமானங்களும்  அதன்   தொடர்ச்சியாக  அவளுடைய செய்கையும் அந்த செய்கையின் வாயிலாக  அவள்  ஒரு அமானுஷ்ய சக்திக்கு உயிர்  கொடுத்து இருப்பதும்தான் படத்தின் மையக் கரு.

இந்தச் சமுதாயத்தில தாய் இல்லாத  பிள்ளைக்கு கிடைக்கும் அரவணைப்பு, பிள்ளை இல்லா தாய்க்கு கிட்டுவதில்லை. இந்த  பிரச்சினைதான் நம் கண்ணுக்கு  தெரிய வரும் சமுதாய பிணி என்பேன். 

இந்த படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள், சக நடிக,  நடிகையர், இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம், தயாரிப்பாளர் ஷான், மற்றும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’  படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி இருக்கும் ஆரா சினிமாஸ்  நிறுவனத்தார்க்கும்  என் மனமார்ந்த நன்றி..” என்கிறார் அனிதா ரெட்டி.

Our Score