full screen background image

சந்தானத்துக்கு ஜோடியான மேகா ஆகாஷ்

சந்தானத்துக்கு ஜோடியான மேகா ஆகாஷ்

பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் அதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான  வி.ஸ்ரீ நட்ராஜ் தயாரிக்கும் புதிய படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

இந்தப் படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். மேலும் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இசை – சீன் ரோல்டன், ஒளிப்பதிவு – ‘விட்னெஸ்’ படப் புகழ் தீபக், படத் தொகுப்பு – ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘டெடி’ படப் புகழ் சிவ நந்தீஸ்வரன், கலை இயக்கம் : ‘கோமாளி’ படப் புகழ் ராஜேஷ், நடன இயக்கம் – ஷெரிஃப், இணைத் தயாரிப்பு – விவேக் குச்சிபோட்லா. இப்படத்தை ‘டிக்கிலோனா’ புகழ் கார்த்திக் யோகி இயக்குகிறார்.  

இந்தப் படத்தில் நடிப்பதற்கான நாயகிக்கான தேர்வு மும்முரமாக நடந்து வந்த நிலையில் கடைசியாக மேகா ஆகாஷை நாயகியாக தேர்வு செய்துள்ளனர். மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் ஒரு டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குநர் கார்த்திக் யோகி, காமெடி கிங் கவுண்டமணியின் மிகப் பெரிய ரசிகர். மேலும் அவரது முந்தைய படமான ‘டிக்கிலோனா’கூட கவுண்டமணியின் பல நகைச்சுவை வரிகளால் ஈர்க்கப்பட்டு உருவானதுதான்.

அந்த வரிசையில் கவுண்டமணியின் புகழ் பெற்ற கவுண்ட்டர் டயலாக்குகளில் ஒன்றான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்தப் படம் ஒரு பீரியட் காமெடி-ட்ராமா படமாக தயாராகி வருகிறது.

விரைவில் இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.

Our Score