full screen background image

தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள் – போலீஸ் மீது மீரா மிதுன் புகார்

தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள் – போலீஸ் மீது மீரா மிதுன் புகார்

நடிகை மீரா மிதுனுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருந்து அவரால் வெளியில் வர முடியவில்லை.

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன், மத்திய குற்றப் பிரிவு போலீசாரால், கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கனவே அவர் மீது எழும்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் ஊழியரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில், நடிகை மீரா மிதுன் மீது நீதிமன்றத்தில், போலீசார் நேற்று குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கில், குற்றப் பத்திரிகையை பெற்றுக் கொள்வதற்காக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் மாஜிஸ்திரேட்டிடம், போலீசார் தன் மீது தொடர்ந்து வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக புகார் தெரிவித்தார். மேலும் எழும்பூர் போலீசார், இந்த வழக்குகள் குறித்து தன்னிடம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், தன் சார்பாக வாதாட வழக்கறிஞர்கூட வரவில்லை எனவும் குற்றம் சாட்டினார். 

பின்னர், இந்த வழக்கில் நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மீரா மிதுன் மீது மொத்தமுள்ள நான்கு வழக்குகளில் இதுவரை 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் மட்டும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மீரா மிதுன் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Our Score