full screen background image

கல்லூரியில் சேர்ந்தார் நடிகை லட்சுமி மேனன்

கல்லூரியில் சேர்ந்தார் நடிகை லட்சுமி மேனன்

‘கொம்பன்’ பிரஸ்மீட்டில் பேச வந்த நடிகை லட்சுமி மேனன் எடுத்த எடுப்பிலேயே “நான் ஒரு விஷயத்தை மொதல்ல கிளியர் செஞ்சர்றேன்.. எனக்கு எக்ஸாம் முடிஞ்சு போச்சு. நீங்க யாரும் கவலைப்படாதீங்க. இனிமேல் எந்தப் படத்திற்கும் கால்ஷீட் கொடுத்து நடிப்பேன். எனக்கு எக்ஸாம் நடக்குதா..? இல்லையா..? முடிஞ்சிருச்சா..? முடியலையான்னு நீங்கதான் ரொம்ப கவலைப்பட்டீங்க. அதான் முன்னாடியே சொல்லிடறேன்..” என்று வாலண்டியராக முன் வந்து சொல்லி மீடியாக்களை திடீர் அதிர்ச்சியாக்கினார்.

தேர்வும் முடிந்து, ரிசல்ட்டும் வெளியாகிவிட்டது. சிபிஎஸ்சி முறையில் படித்த லட்சுமி மேன்ன் 70 சதவிகித மதிப்பெண்கள்தான் எடுத்திருக்கிறாராம். இதனால்தான் வெளியில் சொல்லாமல் ‘பாஸ்’ என்று மட்டுமே சொல்லி எஸ்கேப்பானதாக கிசுகிசு.

அதற்கடுத்து ‘தல’ அஜீத்தின் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறார். பல முன்னணி ஹீரோயின்கள் நடிக்க மறுத்த கேரக்டரில் தைரியமாக லட்சுமி மேனன் நடித்து வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டது தமிழ்த் திரையுலகம். “எந்த கேரக்டரா இருந்தால் என்ன? எனக்குப் பிடிச்சிருக்கு நடிக்கிறேன்..” என்றார்.

lakshmi menon-5

அதே வேகத்தில் இப்போது கல்லூரியிலும் சேர்ந்துவிட்டாராம். கொச்சி அருகே தீவாராவில் இருக்கும் SACRED HEART கல்லூரியில் சேர்ந்திருக்கிறாராம். ஆனால் என்ன பாடப்பிரிவு என்று சொல்லவில்லை. “எனது வாழ்க்கையின் இன்னொரு சந்தோஷ உணர்வை அனுபவிக்கப் போகிறேன்…” என்று உற்சாகத்தோடு சொல்லியிருக்கிறார்.

வாழ்த்துகள்ம்மா.. ஸ்கூல்ல லீவு போட்டுட்டு வந்து நடிச்சீங்க.. ஓகே.. இப்போ இதே மாதிரி காலேஜ்லயும் சினிமா ஷூட்டிங்குக்காக லீவு கொடுப்பாங்களோ… கொடுக்க மாட்டாங்களோன்னு தெரியலை.. இதை மட்டும் கன்பார்ம் பண்ணி இன்னொரு செய்தியையும் நீங்களே சொல்லிருங்க மேடம்..!

Our Score