நவராத்திரி விழாவை காதலருடன் கொண்டாடிய காஜல் அகர்வால்..!

நவராத்திரி விழாவை காதலருடன் கொண்டாடிய காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய வருங்கால கணவரான கவுதம் கிச்சலின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த காஜல் அகர்வாலுக்கு வரும் அக்டோபர் 30-ம் தேதியன்று திருமணம் நடைபெறவுள்ளது.

இது கொரோனா லாக் டவுன் காலம் என்பதால் மிக எளிமையாக.. உறவினர்கள், நண்பர்கள், தேர்ந்தெடுத்த சினிமாவுலக பிரமுகர்கள் என்று 30 பேரை மட்டுமே இந்த திருமண விழாவிற்கு அழைத்துள்ளாராம் காஜல் அகர்வால். இந்தத் திருமணம் மும்பையில் உள்ள காஜலின் வீட்டிலேயே நடைபெறவுள்ளது.

மணமகனான கவுதம் கிச்சலின் புகைப்படத்தை இதுவரையிலும் வெளியில் பகிர்ந்து கொள்ளாத நடிகை காஜல், இந்த விஜயதசமி பண்டிகை விழாவை தன்னுடைய வருங்கால கணவருடன் இணைந்து கொண்டாடியதாகச் சொல்லி தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.