நடிகை ஹூமா குரேஷி, அஜித் குமாருடன் இணைந்து நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.
நாளை உலகம் முழுவதும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக உள்ள நிலையில், இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் ஹூமா குரேஷி.
இது குறித்து ஹூமா குரேஷி கூறும்போது, “இந்த ‘வலிமை’ எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம். எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது.
‘பில்லா-2’ படத்திலேயே அஜீத்தும் நானும் இணைந்து பணியாற்ற வேண்டியது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. இந்த ‘வலிமை’ படத்திற்கான அழைப்பு வந்தபோது, நான் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவருடன் திரையைப் பகிரப் போகிறேன் என்பது, எனக்கு மிகப் பெரும் உற்சாகத்தை தந்தது.
இந்த ‘வலிமை’ படத்தில் அஜித்குமார் சாருடன் இணைந்து நான் நிறைய காட்சிகளில் வருகிறேன். எங்கள் காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்.
இயக்குநர் வினோத் சார் என்னுடைய கேரக்டரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட பாத்திரமாக உருவாக்கியுள்ளார்.
படப்பிடிப்பில் ஒவ்வொரு முறையும், ஆக்சன் பிளாக்குகள் என்றாலே, நான் மிகவும் உற்சாகமாகிவிடுவேன். பொதுவாக, ஒரு ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படத்தில் ஆண் கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமே அதில் நடிக்கும் வாய்ப்புகள் இருக்கும. ஆனால், வினோத் சார் பெண் கதாபாத்திரங்களைத் கணம் மிகுந்த பாத்திரமாக உருவாக்கி திரைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்…” என்றார்.
இந்ச ‘வலிமை’ படத்தினை இயக்குநர் H.வினோத் எழுதி இயக்கியுள்ளார், Bayview Project LLP நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
மேலும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் மற்றும் விஷுவல் ப்ரோமோக்களில் மனதைக் கவரும் அதிரடி காட்சிகள் ‘வலிமை’ மீதான எதிர்பார்ப்பை மென்மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.
இந்த வருடத்திற்கான தமிழ் திரைப்பட பட்டியலில் ரசிகர்களின் பேராதரவை பெற்று, எதிர்பார்ப்பில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.









