full screen background image

தனியார் பள்ளியில் டீச்சர் வேலை பார்க்கும் நடிகை தேவயானி..!

தனியார் பள்ளியில் டீச்சர் வேலை பார்க்கும் நடிகை தேவயானி..!

நடிகை தேவயானியை டிவி பக்கமும் பார்க்க முடியவில்லை.. சினிமாவிலும் பார்க்க முடியவில்லை. சொந்தப் படம் கொடுத்த தோல்வியால் ஒருவேளை முழு நேர குடும்பத் தலைவியாகிவிட்டாரோ என்று கோடம்பாக்கம் நின்த்துக் கொண்டிருக்க… அவரோ கூலாக டீச்சர் வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறாராம்.

இது பற்றி இன்றைய ‘குமுதம்’ பத்திரிகைக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியின் மூலம் இது தெரிய வந்துள்ளது.

அண்ணா சாலை சர்ச் பார்க் கான்வெட்டில்தான் தற்போது 4-ம் வகுப்பு மாணவிகளுக்கு டீச்சராக இருக்கிறாராம் நடிகை தேவயானி.

இது பற்றி பேசியிருக்கும் தேவயானி, “என் குழந்தைகளுக்கு டீயூஷன் டீச்சர் இல்லை. நானேதான் டீச்சர். அவங்க புராஜெக்ட்டை தினம் நான்தான் போட்டுக் கொடுக்குறேன். அப்படியே ப்ரீயா இருந்த டைம்ல டீச்சர் டிரெயினிங் கோர்ஸ் ஒன்றை முடிச்சேன்.

அந்தப் படிப்புக்காக ஆறு மாசம் புராஜெக்ட் ஒர்க் பண்ணி எக்ஸாம் எழுதணும். எந்தப் பள்ளிக்கூடத்தைப் போய்க் கேட்பதுன்னு குழப்பம் இருந்துச்சு. என் குழந்தைகள் படிக்கிற சர்ச் பார்க் ஸ்கூலுக்கே போய்க் கேட்டேன். அவங்க ரொம்ப சந்தோஷமா வரச் சொல்லிட்டாங்க..

டீச்சிங்ல என்னோட ஈடுபாட்டை பார்த்து மெய் சிலிர்த்துப் போயி்ட்டாங்க.. பிரின்ஸிபாலுக்கு ரொம்ப ஷாக். என் பிராக்டிக்கல் முடிஞ்ச பிற்பாடு ஒரு நாள் ஸ்கூல்ல இருந்து போன்.. மிஸ் ஒருத்தங்களுக்கு கல்யாணம். நீங்க தற்காலிகமா வந்து கிளாஸ் எடுக்க முடியுமான்னு.. ஆஹா.. சூப்பர்.. கட்டாயம் வரேன்னு சொல்லிட்டு மறுநாளே டீச்சர் வேலைக்கு கிளம்பி்ட்டேன்..

என்னை நம்பி 45 குழந்தைகளை ஒப்படைச்சிருக்காங்க. 100 வருஷம் பழமையான ஸ்கூல்ல நான் இன்னிக்கு டீச்சர்.. முதல்ல சீனியர் நர்சரி. அடுத்து செகண்ட் ஸ்டேண்டெர்ட். அப்புறம் போர்த்.. என்னாலேயே என்னை நம்ப முடியலை.

நர்சரில இருந்து பிளஸ்டூ வரைக்கும் நிறைய பிள்ளைங்க படிக்கிறாங்க.. ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தைக்கு பர்த்டே. டெய்லி ஒவ்வொரு குழந்தையும் எனக்கு பர்த் டே டீச்சர்ன்னு சொல்லி சாக்லேட் கொடுக்குறாங்க. தினமும் கை நிறைய சாக்லேட்டுகளுடன்தான் வீட்டுக்கு வர்றேன்..

அவங்க நோட்ல குட்ன்னு எழுதும், சின்னதா ஸ்டார் போடும்போதும் எனக்கு ஏற்படுற ஹேப்பிக்கு ஈடே இல்லை. ஆட்டோகிராப் போட்ட அதே கைல இப்போ மார்க் போட்டுக்கிட்டிருக்கேன்..” என்கிறார் தேவயானி..

தேவயானியை திரையில் பார்க்க முடியாமல் அவரது ரசிகைகளுக்கு வேண்டுமானால் வருத்தமாக இருக்கும். அதான்.. தினம், தினம் நம்முடைய குட்டீஸ்கள் தேவயானியை ரசிக்கிறார்களே.. விடுங்கப்பா..!

அப்படியே உங்க வீட்டுக்காரர் ராஜகுமாரனுக்கும் எங்கயாச்சும் வேலை வாங்கிக் கொடுத்து கூட்டிட்டுப் போயிட்டீங்கன்னா நல்லாயிருக்கும் மேடம்..!

Our Score