full screen background image

“சிம்புவுடன் நடித்தே தீருவேன்” – நடிகை தேவயானி ஷர்மாவின் ஒரே லட்சியம்..!

“சிம்புவுடன் நடித்தே தீருவேன்” – நடிகை தேவயானி ஷர்மாவின் ஒரே லட்சியம்..!

டெல்லியை பூர்விகமாக கொண்ட நடிகை தேவயானி ஷர்மா, தற்போது ஹிந்தி  மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.  

2021-ம் ஆண்டு, ரொமான்டிக்’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டிய கலைகளில்  தேர்ச்சி பெற்றிருக்கிறார்.  

தனது திரையுலகப் பிரவேசம், நோக்கம் பற்றி தேவயானி ஷர்மா பேசும்போது, “ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நான் நடித்து வந்தாலும், எனக்கு தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசைதான் எப்பொழுதும் உள்ளது.    

சாதாரண கதாநாயகியாக  மட்டுமில்லாமல்,  என் நடிப்புத் திறனை முழுவதும்  செயல்படுத்தி  தமிழக மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும்.

கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள்.  இவர்கள்தான் எனக்கு  முன்னுதாரணம். வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதை ஆகும். இதற்காக முழு வீச்சில் இறங்கி உள்ளேன்.  அதற்கான வேலையும் தொடங்கிவிட்டது.  

அது மட்டுமின்றி தமிழகத்து மக்கள்  என் நடிப்பை அங்கீகரித்து  என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய திரையுலக வாழ்க்கையின் லட்சியம்..” என்றார்.

சிம்புவுடன் நடித்தே தீருவது என்ற இவரது குறிக்கோள் வெற்றியடைய வாழ்த்துகிறோம்..!

அதுக்கு முதல்ல சிம்பு தம்பி சினிமால நடிக்கணுமே..!?

Our Score