ஒரே கல்யாண நியூஸா வருதேப்பா..!
‘தாமிரபரணி’ படத்தில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்திருக்கும் நடிகை பானுவுக்கு கல்யாணமாம்..!
‘தாமிரபரணி’க்கு பிறகு ‘அழகர்மலை’, ‘ச்ட்டப்படி குற்றம்’, ‘பொன்னர் சங்கர்’, ‘புதுமுகங்கள் தேவை’, ‘மூன்று பேர் மூன்று காதல்’, ‘தேசிங்கு ராஜா’, ‘வாய்மை’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் பானு.
முக்தா எல்சா ஜார்ஜ் என்ற இயற்பெயருடைய இவர் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கடைசியாக வரவிருக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ மற்றும் ‘பாம்பு சட்டை’ ஆகிய படங்களில் ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.
இப்போது திடீரென திருமண அறிவிப்பை அறிவித்திருக்கிறார் பானு. ரிங்கு டோமி என்பவரை திருமணம் செய்யப் போகிறாராம். இது பெற்றோர்களே நிச்சயித்த கல்யாணமாம். வரும் 30-ம் தேதி கேரளாவில் இவருடைய திருமணம் நடைபெறவிருக்கிறது.
பானுவுக்கு நமது வாழ்த்துகள்..!