ஆபாச போலி புகைப்படங்கள் – நடிகை ஆஷா சரத் போலீஸில் புகார்

ஆபாச போலி புகைப்படங்கள் – நடிகை ஆஷா சரத் போலீஸில் புகார்

எப்போதும் தொடர்ந்து நடந்து வருவதுதான். இப்போது திருமதி ஆஷா சரத்திற்கு நடந்திருக்கிறது.

பிரபல மலையாள நடிகையான ஆஷா சரத், ‘திரிஷ்யம்’ என்ற ஒரேயொரு படத்தின் மூலம் கேரளாவில் பிரபலமானவர். தமிழில் ‘பாபநாசம்’ படத்தில் அதே ஐ.ஜி. கேரக்டரில் நடித்து தமிழகத்திலும் பல ரசிகர்களை தனக்கென உருவாக்கிவிட்டார். 44 வயதான ஆஷா சரத்திற்கு திருமணமாகி கணவரும், டீன் ஏஜில் இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இவரது கணவர் துபாயில் தொழிலதிபராக இருக்கிறார்.

சமீபத்தில் இவருடைய முகத்தினை மார்பிங் செய்த ஆபாச புகைப்படங்கள் பல்வேறு ஆபாச இணையத்தளங்களில் வலம் வந்து கொண்டிருப்பதை யாரோ ஒரு நண்பர் ஒருவர் இவரிடம் காட்ட அதிர்ச்சியாகியிருக்கிறார் ஆஷா சரத்.

மற்றவர்களை போல கண்டு கொள்ளாமல் போக விருப்பமில்லாத ஆஷா சரத், இன்றைக்கு இது பற்றி கொச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளாராம்.

இது பற்றி அவர் சொல்லியிருப்பது இதுதான் :

“இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கும், எனது நலம் விரும்பிகளுக்கு எனது நன்றிகள்.

சில நாட்களுக்கு முன்னால் எனது முகம் தாங்கிய நாகரிகமற்ற, ஆபாச புகைப்படங்களை இணையத்தில் பார்க்க நேர்ந்த்து. மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். இது போன்ற தருணங்களில் பெண்கள் அடக்கமாக அமைதியாக ஒதுங்கிப் போய்விடுவார்கள் என்று நினைத்துதான் இப்படி சில அயோக்கியர்கள் இதனை செய்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.

ஆகனே இதை இப்படியே விட எனக்கு மனமில்லை. கொச்சி போலீஸ் கமிஷனரிடம் இன்றைக்கு இது குறித்து புகார் செய்திருக்கிறேன்.  அவர்களும் உடனேயே எனது புகாரை ஏற்றுக் கொண்டு சைபர் கிரைம் போலீஸ் மூலமாக விசாரித்து வருகிறார்கள்.

மிக விரைவில் அந்த அயோக்கியர்கள் பிடிபட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியுடன் நம்புகிறேன். இவர்களை போன்று பெண்களை அவமதிப்பு செய்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டே ஆக வேண்டும். இந்த வழக்கில் அத்தகைய முடிவுக்கு வரும்வரையில் நான் போராடுவது என்று முடிவு செய்திருக்கிறேன். நான் ஒருபோதும் இதிலிருந்து பின் வாங்க மாட்டேன்.

பெண்களை பொது இணையவெளிகளில் அவமரியாதை செய்பவர்களை அடையாளம் காட்ட நாம் முழு மூச்சுடன் இணைய வேண்டும். மற்ற அனைத்தையும்விட இந்த விஷயத்தை நாம் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தை உடனுக்குடன் என் கவனத்திற்குக் கொண்டு வந்த மீடியாவுலகத்திற்கும் எனது நன்றிகள்..” என்று சொல்லியிருக்கிறார்.

ஐ.ஜி.யாக மூன்று மொழிகளிலும் நடித்துவிட்டதால் அந்த போலீஸ் தைரியம் ஆஷா சரத்திற்கு வந்துவிட்டது போலும்.. சபாஷ் என்று பாராட்டத்தான் தோன்றுகிறது..! 

Our Score