full screen background image

ஆந்திர புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா, விஷால், கார்த்தி நிதியுதவி..!

ஆந்திர புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா, விஷால், கார்த்தி நிதியுதவி..!

கடந்த இரு நாட்களுக்கு முன்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களைத் தாக்கிய ஹூட் ஹூட் புயலால் அந்த மாவட்டப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

விசாகப்பட்டிணம் விமான நிலையத்தின் ஒரு பகுதி இந்தப் புயல் சீற்றத்தினால் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. பல வீடுகள் மூழ்கியதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.

‘தேசத்தின் துயரம்’ என்று மத்திய அரசு இந்தப் புயல் சீற்றத்தை வர்ணித்துள்ளது. தமிழக அரசு புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு ஆந்திர மாநில அரசுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

இதேபோல் ஆந்திர மாநில சினிமாத் துறையினரும் புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடைகளை வழங்கியுள்ளனர். நடிகர் சிரஞ்சீவி 50 லட்சமும், நடிகர் பாலகிருஷ்ணா 30 லட்சமும் ஆந்திர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களது நிதியுதவியாக வழங்கியுள்ளனர்.

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா 15 லட்சமும், அவரது மனைவி விஜயநிர்மலா 10 லட்சமும், இவர்களது மகன் நடிகர் மகேஷ்பாபு 25 லட்சமும் வழங்கியிருக்கிறார். நடிகர் பிரகாஷ்ராஜ் 10 லட்சம் வழங்கியிருக்கிறார்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ரூ.50 லட்சம் வழங்குவதாக அறிவித்து உள்ளார். தயாரிப்பாளர் ராமாநாயுடுவின் குடும்பத்தினர் ரூ.60 லட்சம் வழங்குகிறார்கள்.

சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண்தேஜா ரூ.15 லட்சமும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ரூ.20 லட்சமும், நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.20 லட்சமும், நடிகர் பிரபாஸ் ரூ.20 லட்சமும், நடிகர் ரவி தேஜா ரூ.10 லட்சமும், நடிகர் அல்லரி நரேஷ் ரூ.5 லட்சமும், நடிகர் பிரம்மானந்தம் ரூ.3 லட்சமும் வழங்குவதாக அறிவித்து உள்ளனர். தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ரூ.25 லட்சம் வழங்குகிறது.

மேலும் நடிகர்கள் நாகார்ஜூனா ரூ.20 லட்சம், நிதின், ராம், கல்யாண்ராம் ஆகியோர் தலா ரூ.10 லட்சம், கோபிசந்த், சுனில் ஆகியோர் தலா ரூ.5 லட்சம், சந்தீப் கிஷன் ரூ.2½ லட்சம், நிகில் ரூ.2 லட்சமும் நிதியுதவியாக அறிவித்துள்ளனர்.

நடிகைகள் சமந்தா ரூ.10 லட்சம், காஜல் அகர்வால் ரூ.5 லட்சம், ரகுல் பிரீத்சிங் ரூ.1 லட்சமும் அறிவித்துள்ளனர். இதைப் போல தெலுங்கு இயக்குனர்களான திரிவிக்ரம், சீனு வைட்லா ஆகியோர் தலா ரூ.10 லட்சமும், சீனு வைட்லா ரூ.7 லட்சமும் வழங்கியுள்ளனர்.

தமிழ்ச் சினிமா நடிகர்களில் நடிகர் சூர்யா 25 லட்சம் நிதியுதவி செய்திருக்கிறார்.. இதேபோல் நடிகர் விஷாலும் 15 லட்சம் கொடுத்திருக்கிறார். நடிகர் கார்த்தி 12.5 லட்சம்  நிதியுதவியாக வழங்கியிருக்கிறார்..! ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா 12.5 லட்சம் வழங்கியுள்ளார்.

நல்ல மனசுக்காரர்கள் எங்கேயும்தான் இருக்கிறார்கள்..! இது போன்ற காலங்களில் சக மனிதர்களின் இது போன்ற உதவிகள்தான் மனித நேயம் காத்து நிற்கின்றன..!

Our Score